இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்..

kisan vikas patra scheme at post office in tamil 

கிசான் விகாஸ் பத்திரம்

நாம் சம்பாதிக்கும் தொகையில் ஒரு பங்கை சேர்த்தால் மட்டுமே நம்மால் பிற்காலத்தில் சந்தோசமாக இருக்க முடியும். சேமிப்பு என்று யோசிக்க ஆரம்பித்தால் நமக்கு முதலில் நினைவு வருவது வங்கிகள் தான். வங்கிகளில் சேமிக்கும் எண்ணம் வந்தால் எந்த திட்டத்தின் கீழ் அதனை முதலீடு செய்வது அல்லது சேமிப்பது என்ற பல கேள்விகள் வரும். இப்போது தபால் துறையில் பல அருமையான சேமிப்பு திட்டங்களை அறிமுக படுத்தியுள்ளது. அவற்றில் ஒன்று தான் KVP என கூடிய கிசான் விகாஸ் பத்திரம். இதில் நீங்கள் முதலீடு செய்தல் இரட்டிப்பு சந்தோசம் தான். வாருங்கள் அந்த இரட்டிப்பு சந்தோசம் தரக்கூடிய கிசான் விகாஸ் பத்திரம் திட்டத்தை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

Kisan Vikas Patra Post Office Scheme:

இந்திய தபால் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில், மிக மிக முக்கியமான சேமிப்பு திட்டம் தான் KVP என்ற கிசான் விகாஸ் பத்திரம். இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாக இருக்கும்.

முதலீடு தொகை:

இந்த திட்டத்தில், குறைந்தபட்சம், ரூபாய் 1,000 முதல் முதலீடு  கொள்ளலாம். அதிகபட்ச முதலீடு என எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால், உங்களது Pan Card கொடுக்க வேண்டும். இதே 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் நீங்கள் முதலீடு செய்யும் போது உங்களது வருமானத்திற்கான ஆவணத்தினை (சம்பளம் சர்டிபிகேட்) நீங்கள் கொடுக்க வேண்டும். நீங்கள் முதலீடு செய்யும் தொகையானது 124 மாதங்கள், அதாவது 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் கழித்து இரட்டிப்பாகிறது.

வயது தகுதி:

இத்திட்டத்தில் 18 வயதில் இருந்து உள்ள இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் சேர்ந்து கொள்ளலாம்.

ஒரு குழந்தை அல்லது முதியவர்களுடனும் இணைந்தும் முதலீடு செய்யலாம். அப்படி இணையும் போது குழந்தையின் வயது, பாதுகாவலரின் பெயர் அல்லது பெற்றோர் பெயரை மறக்காமல் கொடுக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் அறக்கட்டளைகள் கூட இணையலாம்.

ஆனால் NRI- கள் இணைய முடியாது.

4,00,000 முதலீடு செய்து 8,00,000 ரூபாயை வருமானமாக பெற வேண்டுமா

வட்டி விகிதம்:

தபால் துறையில் அறிமுகப்படுத்தியுள்ள இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் 7.2% ஆகும்.

முதிர்வு காலம்:

நீங்கள் இந்த திட்டத்தில் சேர விரும்பினால் இதற்கான முதிர்வு காலம் 10 வருடம் 4 மாதம் ஆகும்.

திட்டத்தில் இணைவது எப்படி?

கிசான் விகாஸ் திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் சென்று, தங்களது அடையாள மற்றும் முகவரி ஆவணங்களைச் சமர்ப்பித்து சேமிப்பைத் துவங்கலாம்.

பிற வசதிகள்:

நீங்கள் விரும்பினால் இந்த சேமிப்புத் திட்டத்தை மற்றொருவரின் பெயருக்கு மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.

அப்படி இல்லை எனில் ஒருவேளை முன்கூட்டியே பணத்தைப் பெற விரும்பினாலும் பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால் அதற்கு இந்த திட்டத்தில் சேர்ந்து 30 மாதங்கள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

எனினும் நீங்கள் பணத்தைப் பெறும் நாள் வரை வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் 2 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்:

எடுத்துக்காட்டாக..

நீங்கள் 2 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 10 வருடம் 4 மாதங்கள் முடிவில் நீங்கள் செலுத்திய தொகைக்கு இரட்டிப்பான தொகை கிடைக்கும். அதவாது நீங்கள் செலுத்திய தொகை 2 லட்சத்திற்கு 4 லட்சம் முதிர்வு தொகையாக நீங்கள் 10 வருடத்தின் முடிவில் பெறுவீர்கள்.

மாதம் 2,467 ரூபாய் வருமானம் தரக்கூடிய Post Office-ன் அருமையான POMIS சேமிப்பு திட்டம்

IOB-யின் SCSS திட்டத்தின் கீழ் நீங்கள் செலுத்தும் தொகைக்கு வட்டி மட்டும் 12,30,000…. 3 மாதத்திற்கு ஒரு முறை வரவு ….

மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil