Archanai in Tamil
பொதுவாக நம் அனைவருக்குமே அன்றாடம் நாம் பயன்படுத்தும் அல்லது கேட்கும் வார்த்தைகளின் அர்த்தம் பற்றி தெரிவதில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவின் வாயிலாக பல்வேறு வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வங்கியில் இப்பதிவின் மூலம் அர்ச்சனை என்பதன் பொருள்/அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க.
நாம் அன்றாடம் அல்லது கோவிலுக்கு செல்லும்போது அர்ச்சனை செய்வது வழக்கம். ஆனால், இந்த அர்ச்சனை என்றால் என்ன அர்த்தம்.? இச்சொல் எதிலிருந்து தோன்றியது.? என்பதை தெரிந்திருக்க மாட்டோம். எனவே, இப்பதிவின் வாயிலாக அர்ச்சனை என்ற சொல்லுக்கான அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9 |
அர்ச்சனை என்பதன் பொருள்:
அர்ச்சனை என்ற சொல்லுக்கு சிலை என்று பொருள். இச்சொல் “அர்ச்சா” மற்றும் “அர்ச்சித்தா”என்ற சமசுகிருத சொல்லில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள் தோன்றின. ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்களுள் அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது. ஆகையால், இறைவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்கள் பற்றி பின்வருமாறு பார்க்கலாம். அர்ச்சனை என்பது வேதம் பயின்ற ஒரு நபர் பக்தர்களுக்காக அவர்களின் வேண்டுதலை கடவுளிடம் எடுத்துரைப்பது ஆகும். கோவிலில் அர்ச்சனை செய்பவர் அர்ச்சகர் அல்லது பூசாரி எனப்படுகிறார்.
ஆறுவகை உபசாரங்கள்:
1.அபிஷேகம்
தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் செய்யப்படுவது.
2. அலங்காரம்
பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும், மலர் மாலைகளாலும், தங்க நகைகளாலும், வைர வைடூரியங்களாலும் அழகுபடுத்துவதாகும்.
3. அர்ச்சனை
பூக்களாலும், பாக்களாலும் செய்யப்படுவது.
4. நைவேத்தியம்
பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது.
5. ஆராதனை
தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல்.
6. உற்சவம்
பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |