கடுவன் என்பதன் பொருள்

Advertisement

கடுவன் என்னும் சொல்லின் பொருள்

தமிழ் பேசும் அனைத்து நண்பர்களுக்கும் அன்பான வணக்கங்கள். இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கடுவன் என்னும் சொல்லின் பொருள் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

கடுவன் என்பதன் பொருள் என்ன?

கடுவன் என்னும் சொல்லின் பொருள் ஆண் குரங்கு ஆகும்.

விளக்கம்:

கடுவன் என்பது குரங்கு, பூனை, புலி போன்ற விலங்குகளில் ஆண் பால் ஆகும். உதாரணமாக, கடுவன் பூனை, கடுவன் புலி என்று அழைப்பர்.
இதற்கு தொடர்புடைய வார்த்தைகள் மந்தி (பெண் குரங்கு), மற்றும் வானரம் ஆகும்.
இவ்வார்த்தை சங்க இலக்கியம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது.

நெடும் கழை கொம்பர் கடுவன் உகளினும் – மலை 237

பொருள்:

நீண்ட மூங்கிலின் உச்சிக் கொம்பில் குரங்குகள் (நழுவியும் ஏறியும்) ஆடிக்கொண்டிருப்பினும்

கடுவன் இளவெயினனார் என்னும் பெயர் கொண்ட புலவர் பல பாடல்களை இயற்றியும் உள்ளார்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information In Tamil
Advertisement