கராத்தே என்பதன் பொருள் என்ன? | Karate Porul in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் கராத்தே என்பதற்கான பொருள் என்னவென்று தெரிந்து கொள்வோம். நாம் பயன்படுத்துகிற மற்றும் உபயோகிக்கும் வார்த்தைகள் பலவற்றிற்கு நமக்கு அது எதற்கு பயன்படுத்தபடுகிறது அதற்கான பொருள் என்ன என்பது தெரிவதில்லை, எல்லா வார்த்தைக்கும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், ஒரு சில வார்த்தைக்கு அதை பற்றிய பொதுவான விஷயங்களை தெரிந்து வைத்து கொள்வது நல்லது.
அந்த வகையில் இந்த பதிவில் பல பேருக்கு நன்மை பயக்கும் கராத்தே என்பதற்கான பொருளை படித்தறியலாம் வாங்க.
கராத்தே என்பதன் பொருள்:
- தற்காப்பு கலைகளில் ஒன்று கராத்தே. போர் அல்லது சண்டைகளில் ஆயுதம் எதுவும் உபயோகப்படுத்தாமல் தனது கைகளை மட்டும் பயன்படுத்தி தற்காத்து கொள்ளும் கலையாகும்.
- அதாவது வெறும் கரங்களை மட்டும் கொண்டு தற்காத்து கொள்ளும் கலையாகும்.
- கராத்தே பயிற்சி பெற்ற வீரர்கள் தங்களுடைய முழு பலத்தையும் ஒன்று திரட்டி அவர்கள் எவ்வளவு பலசாலி என்பதை காட்டுகின்றனர்.
- கைகள், முட்டிகள், முழங்கால்கள், கால்கள் போன்ற உறுப்புகளை போட்டியாளரை தாக்குவதற்கும், எதிரிகளிடம் இருந்து அடிவாங்காமல் தப்பிப்பதற்கும் உபயோகப்படுத்துகின்றனர்.
கராத்தே வரலாறு:
- ஆரம்ப காலத்தில் இது ஒகினாவா தீவில் தோன்றிய கலையாகும். ஜப்பான் தீவு கூட்டத்தில் ரியூக்யுத் தீவுக்கு உரிய சண்டை முறையிலும், சீனாவின் கென்போ என்னும் சண்டை முறையையும் கலந்து உருவானது தான் கராத்தே.
- 1372-ம் ஆண்டில் ரிக்யூ தீவுகள் மற்றும் புஜியான் மாகாணத்தின் இரண்டுக்கும் இடையே வர்த்தக உறவுகள் இருந்தது. இதனால் சீனாவில் உள்ள மக்கள் பல ஒகினாவா தீவில் இடம்பெயர்ந்தனர், இதன் மூலமாக ஒகினாவிற்கு சில கராத்தே முறைகள் அறிமுகமானது.
- ஷோகினாவா எனும் மன்னர் வாழ்ந்த 1429-ல் ஏற்பட்ட அரசியல் அமைப்பு மற்றும் ஷிம்சு இனக்குழு ஒகினாவாவை ஆக்கிரமித்து ஆயுதங்களை தடை செய்தது, இது போன்ற காரணங்கள் ஆயுதங்கள் இல்லாத சண்டைகள் வளர்ச்சி அடைவதற்கு காரணமாக இருந்தது.
- கராத்தே ஜப்பானில் தோன்றிய தற்காப்பு கலை என்றாலும் அது இப்போது சிறிது சிறிதாக உலகம் முழுவதும் பரவி வருகிறது.
கராத்தே வகைகள்:
- தற்காப்பு கலையான கராத்தே இரண்டு வகைகளில் உள்ளது
- ஸ்பேரியிங் (kumite)
- கட்டா (kata) போன்றவை
- ஸ்பேரியிங் கராத்தே போட்டியாளரின் எடை, வயது, பாலினம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த போட்டிக்கான மதிப்பீடு தலைமை நடுவர்களால் தீர்மானிக்கப்படும்.
- கட்டா கராத்தே போட்டிக்கான மதீப்பீடு நீதிபதிகள் குழுவால் தீர்மானிக்கப்படுகிறது.
கராத்தே பயன்கள்:
- தற்காப்பு கலையின் மூலம் எலும்புகள் மற்றும் தசைகளை வலுவாக வைத்து கொள்ள முடியும்.
- மிதமான தற்காப்பு கலையின் மூலம் உங்களின் எடை 500 கலோரி வரை குறையும்.
- மாணவர்களுக்கு இருக்கும் கவனக் குறைவை சரி செய்வதற்கு ஒரு சிறந்த பயிற்சி கராத்தே.
- இப்பொழுது உள்ள சூழலில் பெண்கள் கட்டாயம் கற்க வேண்டிய கலைகளில் கராத்தே முதன்மையானது என்றே சொல்லலாம்.
கராத்தே பயிற்சியில் என்னென்ன பெல்ட்கள் வழங்கப்படும் & அவற்றின் அர்த்தங்கள் என்ன? |
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.Pothunalam.com |