திங்கள் – என்ற தமிழ் சொல்லின் பொருள் என்ன?

Advertisement

திங்கள் என்பதன் பொருள் – Thingal Porul in Tamil

பொதுநலம் நண்பர்களுக்கு வணக்கம்..! கிழமைகளில் வரும் ஓன்று தான் திங்கள். இந்த திங்கள் என்பதன் பொருள் என்ன என்பது பற்றியும், மாதம் என்பதன் தமிழ் சொல் பற்றியும் தான் இந்த பதிவின் மூலம் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நமது பொதுநலம்.காம் பதிவில் நிறைய வகையான வார்த்தைகளுக்கு பொருள் என்ன என்பது குறித்து பதிவு செய்து வருகின்றோம்.

அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது திங்கள் என்பதன் பொருள் என்ன மற்றும் மாதம் என்பதன் தமிழ் சொல் என்ன என்பதை பற்றி தான். அதனால் இப்பதிவை முழுமையாக படித்து அதை தெரிந்து கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்.

திங்கள்- என்ற தமிழ் சொல்லின் பொருள் என்ன?

நாட்களின் பெயர்களில் ஒன்று (திங்கட்கிழமை) என்றும். சந்திரன், நிலா, நிலவு, மதி, அம்புலி, மாதம், புவியின் துணை எனவும் பொருள் தரும்.

திங்கள் – என்பது மாதம், கிழமை இரண்டையும் குறிக்கும்.

திகழ் – என்றால் ஒளி, தோற்றம் என்று பொருள்.

நிலவுக்கு திங்கள் என்ற பெயர் அது திகழும் அளவை/ தோற்றத்தின் அளவைக் குறிப்பதாகும்.

திகழி – என்பது நிலவு திகழும் அளவைப்பொருத்து அமைவது. ஆதித்தமிழர்கள் நிலவானது சுற்றி வரும் சந்திர நாள்காட்டி அடிப்படையில் நாள்களை கணக்கிட்டதனால்..

திகழி > திகதி > தேதி… என்று நாளைக் குறித்தனர்.

தமிழ் மொழியில் திங்கள் – என்பது மாதம், கிழமை இரண்டையும் குறிப்பது போலவே, ஆங்கிலத்திலும் Moon – என்ற நிலவைக் குறிக்கும் சொல்லிலிருந்து தோன்றியதே Month, Monday ஆகியன.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
இன்பம்-மகிழ்ச்சி-சந்தோஷம் மூன்றுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா..?

மாதம் என்பது என்ன?

மாதம்: மதி + அம் = மாதம்.

மதி – என்பதும் அளவைக் குறித்து உருவான சொல் – பின்னர் நிலவையும் குறித்தது.

(வானில் இருக்கும் நிலவின் அளவைக் கண்டறிந்து, இதுமாதத்தின் எத்தனையாவது நாள் என்று கணிக்கும் முறையே சந்திர நாட்காட்டி (Lunar Calendar) எனப்பட்டது).

மாதம் தமிழ் சொல்: 

சரி மாதம் என்பதன் தமிழ் சொல் என்ன என்று உங்களுக்கு தெரியுமா..? பொதுவாக மாதம் என்பதே தமிழ் சொல் தானே. அப்பறம் எப்படி மாதம் என்பதற்கு தமிழ் சொல் வேறு இருக்கிறதா என்று யோசிப்பீர்கள்.

ஆனால் மாதம் என்பதற்கு தூய தமிழ் பெயர் இருக்கிறது. அதாவது “மாஸம்” என்னும் சமஸ்கிருத வேர் சொல்லிலிருந்தே ‘மாதம்’ என்ற சொல் பிறந்தது என்று சொல்லப்படுகிறது. மேலும் திங்கள் என்பது தான் மாதம் என்பதற்கான தூய தமிழ் சொல் ஆகும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement