வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தை பிறந்தால் வழி பிறக்கும் பொருள்

Updated On: November 21, 2023 11:22 AM
Follow Us:
Thai Pirandhal Vazhi Pirakkum
---Advertisement---
Advertisement

Thai Pirandhal Vazhi Pirakkum

பழமொழிகளில் பலவகையான பழமொழிகள் உள்ளது. பழமொழி ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான அர்த்தங்களை கொடுக்கும். அந்த வகையில் தை பிறந்தால் வழி பிறகும் என்று பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன என்று இன்றைய பதிவில் நாம் பார்க்கலாம். மேலும் பலவகையான பழமொழிகளின் அர்த்தங்களை தெரிந்துகொள்ள நமது பொதுநலம்.காம் பதிவின் முகப்பு பகுதியை பார்வையிடுங்கள். சரி வாங்க தை பிறந்தால் வழி பிறகு என்ற பழமொழிக்கு என்ன அர்த்தம் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

தை பிறந்தால் வழி பிறக்கும் பொருள்:

அறுவடை காலம்:

தமிழ் மாதமான ஆடி மாதம் துவங்கி ஆறு மாதத்திற்கு நெற்பயிர் வளர ஆரம்பித்து தை மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும்.

இதில் ஆறு மாதம் விவசாயிகள் தான்பட்ட கடன், துன்பம், கவலைகள் எல்லாம் தீர்ந்து அறுவடை செய்து பணம் ஈட்டி துன்பங்கள் எல்லாம் தீர வழி பிறக்கும்.

இதனால், தை மாதத்தை தமிழர்கள் உற்சாகமாக வரவேற்பார்கள். இதனைத்தான் பொங்கல் விழாவாக கொண்டாடுகிறோம்.

அதேபோல கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி முடிந்து மார்கழி் முடியும் வரை குடமுழுக்கு, திருமணம், புதுமனைப் புகுதல் போன்ற நிகழ்ச்சிகள் நிகழாமல் நிலுவையில் இருக்கும்.

தை மாதம் துவங்கும் போது இவை அனைத்தும் இனிதே துவங்கும். சுபகாரியங்கள் துவங்க வழி பிறக்கும் என்பதால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பத்துக்கு மேல் பத்தினி இல்லை என்ற பழமொழியின் அர்த்தம் தெரியுமா?

பஞ்சம் தீர்க்கும் தை மாதம்:

விளைச்சல் முடிந்து அறுவடை நடந்து பயிர்கள் அனைத்தும் வீடு சேரும் மாதமே தை ஆகும். தை முதல் நாள் சூரியனுக்கு படைப்பார்கள்.

இக்காலகட்டத்தில் தான் தானியப் பயிர்களில் முக்கியமாக நம் தமிழர்களின் அன்றாட உணவான நெல்லானது அதிக அளவிலும், சற்று விலை குறைவாகவும் கிடைக்கிறது.

பெரும்பாலும் ஒரு வருடத்திற்கு தேவையான நெல்லை மக்கள் வாங்கி பத்திரப்படுத்தி கொள்வர். வீட்டில் உணவிற்குப் பஞ்சமின்றி மகிழ்வுடன் இருக்க வழி பிறக்கும் காலம்.

உத்தராயண புண்ணிய காலம்:

உத்தராயணம் என்பது வடமொழிச் சொல்லாகும். வடமொழியில் உத்தர் என்றால் வடக்கு என்றும், அயனம் என்றால் வழி என்றும் பொருள்.

நம் கண்களுக்கு புலப்படும் ஒரே இறை சக்தியாக விளங்குபவர் சூரியன் பகவான் மட்டுமே.  சூரிய பகவான் தனது பயணத்தை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் காலமே உத்தராயணம் ஆகும்.

தை மாதத்தில் சூரியன் ராசி மண்டலத்தில் மகர ராசியில் நுழைந்து 29 நாட்கள், 27 நிமிடங்கள், 16 வினாடிகள் வரை பயணிப்பார்.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரையில் ஆறு மாதத்திற்கு உத்தராயணம் நீடிக்கும். இக்காலமானது ஞானத்தை வழங்கும் காலமாக கருதப்படுகிறது. இதுவே தேவர்களின் காலைப் பொழுது என்று வேதங்களில் கூறப்பட்டுள்ளது.

புராணங்களில் தை மாதம்:

வேத, இதிகாச, புராணங்களில் இந்த தை மாதமானது சிறப்பானதொரு மாதமாக சொல்லப்பட்டுள்ளது. மகாபாரதப் போரில் பீஷ்மர் அர்சுனனின் அம்புகளால் வீழ்ந்தும் உயிர் துறக்கவில்லை. அம்பு படுக்கையில் கிடந்தார்.

தான் விரும்பிய தருவாயில் மரணம் வேண்டும் என்ற வரத்தைப் பெற்ற அவர் “தை முதல் நாள்” அதாவது உத்தராயணம் துவங்கும் வரை காத்திருந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.

உத்தராயணத்தில் தான் ஞானத்தின் வழி பிறக்கும். எனவே அப்பொழுது இறப்பவர்களுக்கு மறுப்பிறப்பு இருக்காது.

இந்த உலகில் வாழ்ந்த இராமலிங்க வள்ளலார் போன்ற எண்ணற்ற சித்தர்கள்  உத்தராயண காலத்தில் முக்தி அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே புராண காலத்திலும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது நம்படுகிறது என்று அறிகிறோம். இவ்வாறு ஒரு பழமொழிக்கு எண்ணற்ற விளக்கங்கள் தந்துள்ள நம் முன்னோர்கள். நாம் தான் அவற்றில் உள்ள விளக்கத்தை அறியாமல் கிண்டலும் கேலியும் செய்து வருகின்றோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
களவும் கற்று மற என்ற பழமொழிக்கான உண்மை அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now