வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

அபிநயா மற்றும் அபிநயஸ்ரீ என்ற பெயருக்கான அர்த்தம்

Updated On: July 15, 2025 6:09 PM
Follow Us:
abinaya name meaning in tamil
---Advertisement---
Advertisement

அபிநயா என்ற பெயருக்கான அர்த்தம் | Abinaya Name Meaning in Tamil..!

பொதுவாக சிலருக்கு தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்தான அ என்ற எழுத்துக்களில் தொடங்கக்கூடிய பெயரினை தான் வைக்க வேண்டும் விருப்பம் இருக்கும். அதிலும் குறிப்பாக தூய தமிழ் பெயரினை வைக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். இத்தகைய பெயர்களின் பட்டியலில் அபிநயா என்ற பெயரும் ஒன்றாக உள்ளது. அ எழுத்துக்களில் தொடங்கக்கூடிய பெயர்களில் அபிநயா என்ற பெயர் இருந்தாலும் கூட இந்த பெயருக்கான அர்த்தம் என்பது நம்மில் பலருக்கு சரியாக தெரிவது இல்லை. ஆனால் இந்த பெயர் பெரும்பாலான நபர்களுக்கு பிடித்த ஒரு பெயராகவும் உள்ளது. ஆகையால் இன்று அபிநயா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..! உங்களின் பெயர் அபிநயவாக இருந்தாலும் பதிவை படித்து அர்த்தத்தை தெரிந்துக்கொள்ளுங்கள்.

அபிநயா பெயர் அர்த்தம்:

அபிநயா என்ற பெயருக்கு அழகான, வெளிப்பாடு அல்லது எக்ஸ்பிரஷன், செயல் மற்றும் இனிமையான என்பது அர்த்தம் ஆகும். பொதுவாக அபி என்ற பெயர் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு வைக்கக்கூடியதாக இருந்தாலும் கூட அபிநயா என்ற பெயர் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே சூட்டக்கூடிய பெயர் ஆகும்.

அபிநயாவின் குணங்கள்:

 அபிநயா பெயர் அர்த்தம்

  1. அபிநயா என்ற பெயரினை உடையவர்கள் பிறருக்கு உதவும் மனப்பான்மை உடையவராகவும், மனிதநேயம் கொண்டவராகவும் இருப்பார்கள்.
  2. அதேபோல் இரக்க குணம் என்பது இவர்களுக்கு அதிகமாக இருக்கும். அதுமட்டும் இல்லாமல் அபிநயாவிற்கு நண்பர்கள் வட்டாரம் என்பது அதிகமாக காணப்படும்.
  3. ஆனால் இந்த பெயரினை உடையவர்கள் மனதில் நினைக்கும் கருத்துக்களை வெளிப்டையாக பேச மாட்டார்கள். மேலும் இந்த பெயரினை உடையவர்கள் எதார்த்தமான குணத்தினை உடையவராக திகழ்வார்கள்.
  4. மேலும் அபிநயா இவருக்கான அங்கீகாரத்தை விட்டுக்கொடுக்காமல் தேடும் குணத்தினை உடையவராகவும் காணப்படுவார்கள்.

அனிதா என்ற பெயருக்கான அர்த்தம் என்ன தெரியுமா 

Abinaya Lucky Number:

பெயர்  பெயருக்கான அர்த்தம் 
1
2
9
14
1
25
1
Total  53

 

அபிநயா என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 53 என்று மேலே அட்டவணையில்  கிடைத்துள்ள. இப்போது இந்த பெயருக்கான கூட்டுத்தொகை என்பது (5+3)= 8 ஆகும். எனவே அபிநயா என்ற பெயருக்கான லக்கி எண் 8 ஆகும்.

நியூமராலஜி முறைப்படி:

 abinaya name in tamil

நியூமராலஜி முறைப்படி நியாயமானவர், தன்னிறைவு கொண்டவர், மற்றவர்களைக் கட்டுப்படுத்த விரும்புபவர், லட்சியம் உடையவர், யதார்த்தம், ஆற்றல் மிக்கவர் மற்றும் தைரியமானவர் என்ற அர்த்தத்தினையும் குறிக்கிறது.

Abinaya Sri Name Meaning in Tamil:

அபிநயாஸ்ரீ என்ற பெயருக்கு நடைமுறை, அன்பு,  நியாயம், தன்னிறைவு, தந்திரம் போன்றவை அர்த்தமாக இருக்கிறது.

இந்த பெயர் உடையவர்கள் சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் தன்னுடைய மனதில் உள்ளதை மற்றவர்கள் முன்னிலையில் வெளிப்படுத்துவது கடினமான ஒன்றாக இருக்கிறது.

மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள். தன்னுடைய நண்பர்கள் தனக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

அன்புக்காக ஏங்க கூடியவர்களாக இருப்பார்கள். அப்படி யாரேனும் அன்பாக நடந்து கொண்டால் அவர்களுக்கு உண்மையாக இருக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

நிலன் பெயர் அர்த்தம் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now