Acknowledge Meaning in Tamil
தினமும் நம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக Acknowledge Meaning in Tamil என்பதை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். பொதுவாக நம் அனைவருக்கும் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதுபோல நாம் யாருடனாவது பேசும் போது அவர்கள், ஏதாவது ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் பேசினால், அதற்கு நமக்கு சில நேரங்களில் அர்த்தம் தெரியாது. அப்படி பலரும் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை தான் Acknowledge. ஆகவே இந்த Acknowledge என்ற வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று பார்க்கலாம் வாங்க..!
Nephew என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்
Acknowledge அர்த்தம் என்ன:
பொதுவாக நம்மில் பலரும் அறிந்தோ அறியாமலோ ஏதாவது தவறு செய்திருந்தால் அதை அவ்வளவு சீக்கிரம் ஒப்புக்கொள்ள மாட்டோம். அதிலும் குழந்தைகள் என்றால் சொல்லவே வேண்டாம். அதுபோல செய்யும் தவறையும் சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சரி அதெல்லாம் இருக்கட்டும். இப்போது எதற்கு தவறை பற்றி பேசுகிறோம் என்று யோசிப்பீர்கள். ஒப்புக்கொள் என்பது தான் Acknowledge என்பதன் தமிழ் அர்த்தமாகும்.
அதாவது Acknowledge என்பதற்கு ஒப்புக்கொள் மாற்று ஏற்றுக்கொள் என்பது தான் அர்த்தமாகும்.
ஒப்புக்கொள் மற்றும் ஏற்றுக்கொள் என்ற வார்த்தையை நாம் அனைவருமே நம் அன்றாட வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்தி வரும் வார்த்தையாகும். ஆகவே இனி Acknowledge என்று ஆங்கிலத்தில் சொல்லி பழகுங்கள்.
Bon Voyage என்பதற்கான தமிழ் அர்த்தம்
Acknowledge எடுத்துக்காட்டுகள்:
- அந்த முடிவு தவறானது என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
- இந்த குழப்பத்தை நீங்கள் ஏற்படுத்தியதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா..?
- அவர்கள் தங்கள் தவறை உடனடியாக ஒப்புக்கொண்டனர்.
- அவளுடைய செயல்களுக்கான பொறுப்பை அவள் ஏற்றுக்கொள்ள மாட்டாள்.
- எனது மின்னஞ்சல்கள் அனைத்தையும் அவர் பெறும்போது விரைவாக ஒப்புக்கொள்கிறார் .
- இந்த கடிதத்தின் ரசீதை ஒப்புக்கொள்ளவும் .
- அவள் ஒரு அட்டையுடன் பரிசை ஒப்புக்கொண்டாள் .
- அவள் புன்னகையுடன் அவனது வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டாள்.
- நான் செய்யாத தவறை என்றும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
Synonyms And Examples:
- Accept – I fully accept that I was wrong..? – நான் தவறு செய்தேன் என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.
- Admit – Why don’t you just admit you got it wrong..? – நீங்கள் தவறு செய்ததை ஏன் ஒப்புக்கொள்ளக்கூடாது.
- Recognize – I do recognize that mistakes were made. – தவறுகள் நடந்தன என்பதை நான் அறிவேன்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |