Advik Name Meaning in Tamil | ஆத்விக் பெயர் அர்த்தம்
இந்த உலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே தங்களை மற்றவர்களிடம் இருந்து தனித்துவமாக காட்டும் பெயரை மிக மிக பிடிக்கும். அதனால் நாம் அனைவருமே நமது பெயரை பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் இருக்கும். அதாவது நமது பெயருக்கான சரியான அர்த்தம் என்ன இந்த பெயரை நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்தது இனிமேலும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் போன்றவற்றை அறிந்து கொள்ள மிகவும் விரும்புவோம்.
அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு தமிழ் மற்றும் மாடர்ன் பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அதே போல் இன்றைய பதிவில் ஆத்விக் என்ற பெயருக்கான அர்த்தம் என்ன என்பதை அறிந்து கொள்வோம் வாங்க..!
Advik Meaning in Tamil:

ஆத்விக் என்ற பெயருக்கு தனித்துவம், பாசம், அன்பு என்பது பொருள் ஆகும். ஆத்விக் பெயர் தமிழ் மற்றும் மாடர்ன் என இரண்டினையும் கலந்து வரும் ஒரு பெயர் ஆகும்.
மேலும் இந்த பெயர் ஆனது பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு தான் அதிகமாக சூட்டப்படுகிறது. இந்த ஆத்விக் என்ற பெயர் உடையவர்கள் பொதுவாக இவர்கள் தனது நண்பர்களுக்கு மிகவும் சிறந்த நண்பராக இருப்பார்கள்.
இவர்கள் ஒரு நாளும் சுயநலமாக இருப்பதை விரும்பவே மாட்டார்கள். அதே போல் இவர்கள் எப்போதும் மற்றவர்களை தான் சார்ந்து இருப்பார்கள். மேலும் இவர்களிடம் இயற்கையாகவே மிகவும் உதவும் குணம் இருக்கும். இதனால் யார் உதவி என்று கேட்டு வந்தாலும் இல்லையென்று சொல்லமால் உதவும் குணம் உடையவராக இருப்பார்கள். இதனால் பலரும் விரும்புவார்கள்.
இவர்கள் எப்பொழுதும் மிகவும் பொறுமையாகவும் நடத்தையில் கண்ணியமாகவும் இருப்பார்கள். இவர்களுடைய தோற்றமானது மற்றவர்களை ரசிக்க வைக்க கூடிய வகையில் இருக்கும். இவர்கள் நண்பர்களுக்கு பக்க பலமாக இருக்க கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் யாரேனும் சீக்ரெட் விஷயம் என்று கூறினால் அதனை யாரிடம் சொல்லாமல் தனக்குள்ளையே வைத்திருப்பார்கள். அந்தளவிற்கு நம்பிக்கைக்கு உரியவர்களாக இருப்பார்கள்.
ஆத்விக் என்ற பெயர் தனித்துவமான மற்றும் அசாதாரண ஒன்றை குறிக்க இந்த பெயர் பயன்படுகிறது. இது இந்திய வம்சா வழியை சேர்த்தவரின் பெயராகும். இது சிறப்பு வாய்ந்த தனித்துவமான பெயரை குறிக்கிறது.
யாஷிகா என்ற பெயருக்கான சரியான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள்
Advik Name Numerology in Tamil:
| Name | Numerology Number |
| A | 1 |
| D | 4 |
| V | 4 |
| I | 9 |
| K | 2 |
| TOTAL | 20 |
இப்போது ஆத்விக் என்ற பெயருக்கு மொத்த மதிப்பெண்ணாக 20 என்பது கிடைத்து இருக்கிறது. இதனுடைய கூட்டு தொகை என்று பார்த்தால் (2+0) = 2 என்பதாகும். ஆகவே ஆத்விக் பெயரிற்கான நியூமராலஜி முறைப்படி அதிர்ஷ்டமான எண் 2 ஆகும்.
ஆத்விக் பெயரிற்கு மதிப்பெண் 2 என்பதால் மிகவும் உணர்ச்சிகரமான, அன்பான, ஆர்வமுள்ள, உற்சாகமான, தைரியமான மற்றும் புதுமையானது போன்றவை ஆத்விக் என்ற பெயரிற்கு நியூமராலஜி முறைப்படி அர்த்தமாக இருக்கின்றது.
இந்த பெயரை உடையவர்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் எதுவென்றால் பச்சை நிறம். அதே போல் இவர்களை அதிர்ஷ்ட கிரகம் எதுவென்றால் நிலவு அல்லது சந்திரன் ஆகும்.
வேறு சில பெயர்களுக்கான அர்த்தம் 👇
வர்ஷினி பெயர் அர்த்தம் என்ன தெரியுமா
உங்களின் பெயர் தன்விகா என்றால் அதற்கான அர்த்தம் இதுதான்
| மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |














