AePS என்பதற்கான விரிவாக்கம் மற்றும் அர்த்தம்..! | AePS Meaning in Tamil

Advertisement

AePS Meaning in Tamil

வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவின் வாயிலாக பல பயனுள்ள பதிவுகளை அறிந்து வருகிறோம். அந்த வகையில் இப்பதிவில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு தகவலை பற்றி பின்வருமாறு பார்க்கலாம். அதாவது, நாம் நிறைய இடங்களில் Aeps என்ற வார்த்தையை கேட்டும் பார்த்தும் இருப்போம். ஆனால், அதனை பற்றிய முழுமையான விபரம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரியாது. எனவே, அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இந்த பதிவு அமையும்.

பொதுவாக, நாம் பேசும் பல வார்த்தைகளை சுருக்கமாக எழுதுவது வழக்கம். உதாரணமாக MESSAGE என்பதை சுருக்கி msg என்று எழுதுவோம். இதுபோன்று சுருக்கி எழுதக்கூடிய பல வாக்கியங்கள் உள்ளது. அதேபோன்று, AePS என்பது சுருக்கி எழுதிய வார்த்தைதான்.. ஆகையால் இப்பதிவின் மூலம் AePS என்பதன் விரிவாக்கம், அர்த்தம் மற்றும் அதனை பற்றிய சில விவரங்களை தெரிந்துகொள்ளலாம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

AePS Full Form in Tamil:

 aeps meaning in tamil

AEPS என்பதன் விரிவாக்கம் Aadhaar Enabled Payment System ஆகும். இதனை தமிழில் ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண அமைப்புகள் என்று கூறுவார்கள்.

What is AePS in Tamil:

AePS என்பது, வங்கி வாடிக்கையாளர்கள் எந்தவொரு வங்கி விவரங்களும் இல்லாமல் ஆதார் கார்டை மட்டும் பயன்படுத்தி பணத்தை எடுக்கவும், அனுப்பவும், செலுத்தவும் அனுமதிக்கும் ஒரு பேமண்டல் முறையாகும். அதாவது, வங்கியின் அக்கௌன்ட் நம்பர், பாஸ்வோர்ட் உள்ளிட்ட விவரங்கள் இல்லாமல் முழுவதும் ஆதார் கார்டை மட்டும் பயன்படுத்தி பணம் எடுக்கவும், செலுத்தவும் மற்றும் அனுப்பவும் பயன்படும் முறை ஆகும்.

இந்த AePS அமைப்பை, அனைத்து ரீடெயில் பேமென்ட் சிஸ்டம்களையும் ஒருங்கிணைக்கும் முக்கிய அமைப்பான National Payments Corporation of India (NPCI) ஆனது, UIDAI உடன் இணைந்து ஆதார் எனேபிள்டு பேமென்ட் சிஸ்டத்தை (Aadhaar Enabled Payment Systems) கொண்டுவந்துள்ளது. இது, எளிமையான முறையில் பண பரிவர்த்தனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட அமைப்பாகும்.

NPCI என்பதற்கான சரியான அர்த்தம் என்ன தெரியுமா

What is AePS Transaction in Tamil:

AePS மூலம் பணம் செலுத்துவதற்கும், எடுப்பதற்கும், பிறருக்கு அனுப்பவும் மைக்ரோ ATM பயன்படுத்தப்படுகிறது. அதாவது, மைக்ரோ ATM -யில் ஆதார் ஆப்ஷனை கிளிக் செய்து அதில் உங்களின் ஆதார் நம்பரை டைப் செய்வார்கள்.

அதன் பிறகு, நீங்கள் எந்தவிதமான Transaction செய்ய விரும்புகிறீர்களோ அதனை கிளிக் செய்வார்கள்.  அதாவது, நீங்கள் டெபாசிட் செய்ய வேண்டுமா.? பணம் எடுக்க வேண்டுமா.?அல்லது பிறருக்கு பணம் அனுப்ப வேண்டுமா.? (Deposit Withdrawal Transfer) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து, நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தேர்வு செய்ய வேண்டும். அதாவது, ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் அல்லது இந்தியன் பேங்க் போன்று உங்கள் வங்கியை தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பிறகு, நீங்கள் எடுக்கும் தொகை, செலுத்தும் தொகை அல்லது அனுப்பும் தொகையினை டைப் செய்ய வேண்டும். இறுதியாக, Biometric Finger Print மெஷினில் உங்கள் கைரேகையை வைத்தால் உங்களுக்கான வேலை எளிதில் முடிந்து விடும்.

அதன் பிறகு, ஸ்லிப் ஒன்று வரும் அதில் உங்களின் Transaction விவரங்கள் அனைத்தும் இருக்கும். அதாவது, நீங்கள் எவ்வளவு பணம் எடுத்து இருக்கிறீர்கள், எவ்வளவு பணம் செலுத்தி இருக்கிறீர்கள், யாருக்கு அனுப்பி இருக்கிறீர்கள் உள்ளிட்ட விவரங்களை அந்த ஸ்லிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும்.

Geyser என்ற வார்த்தைக்கு இதுதான் அர்த்தமா.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement