அகவிலை என்பதற்கான அர்த்தம் தெரியுமா.?

Advertisement

Agavilai Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவின் வாயிலாக அகவிலை என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க. நாம் அனைவருமே அகவிலை அல்லது அகவிலைப்படி என்பதை நிறைய இடங்களில் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதற்கான துல்லியமான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ள நினைத்திருப்போம்.

அப்படி நீங்கள் அகவிலை என்றால் என்ன.? என்பதை அறிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதாவது, உங்களுக்கு பயனுள்ள வகையில் இப்பதிவில் Agavilai Meaning in Tamil விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

Bon Voyage என்பதற்கான தமிழ் அர்த்தம்..!

அகவிலை என்றால் என்ன.?

அகவிலை என்பது, விலைவாசி ஏற்றத்தைக் கணக்கில் கொண்டு அடிப்படை ஊதியத்துக்கு மேல் தரப்படும் கூடுதல் தொகை ஆகும். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால், பொருட்களின் விலையேற்றத்தை கணக்கிட்டு அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கொடுப்பது ஆகும். பணவீக்கத்தைப் பொறுத்து, இது வருடத்திற்கு இரண்டு முறை சரிசெய்யப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளம் ஆனது, அடிப்படை படி, அகவிலை படி மற்றும் வீட்டு வாடகை படி தீர்மானிக்கப்படுகிறது.

இதில், அடிப்படை படி என்பது வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே உயரும். அதாவது, அரசு ஊழியர்கள் வருடாந்திர சம்பளம் உயர்வு பெறும்போது மட்டுமே அடிப்படை படி உயரும். ஆனால், அகவிலைப்படி (Dearness Allowance) என்பது, CPI (Consumer Price Index) போன்றவற்றை அடிப்படையாக கொண்டது. இது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே மாறுபடும்.

உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்லப்போனால் அடிப்படை படியை நிலையாக வைத்து அகவிலைப்படியின் சதவீதப்படி சம்பளம் உயரும் அல்லது குறையும். உதாரணமாக அகவிலைப்படி 4 சதவீதம் உயர்ந்தால், அம்மாதத்திற்கான சம்பளமும் வயரும்.

Agavilai Meaning in English:

அகவிலை என்பதை ஆங்கிலத்தில் Dearness Allowance என்று கூறுவார்கள்.

Grade Pay என்றால் என்ன.?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement