Ajwain Meaning in Tamil
வணக்கம் மக்களே.. நமது பொதுநலம்.காம் தலத்தில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது Ajwain என்பதன் தமிழ் பொருள் என்ன என்பது குறித்த தகவலை தான். இந்த அஜ்வைன் என்ற வார்த்தைக்கு என்ன பொருள். எதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த தகவலை இப்பொழுது நாம் அறியலாம் வாங்க.
மேலும் நமது தலத்தில் பலவகையான ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அர்த்தம் என்ன என்று பதிவு செய்துள்ளோம் அதனை அறிய இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் 👉 அர்த்தம் சரி வாங்க இப்பொழுது Ajwain Meaning என்ன என்று பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Karaoke Meaning in Tamil
Ajwain என்பதன் தமிழ் பொருள்..!
இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருத்துவ மதிப்புகளைக் கொண்ட ஒரு தாவரம் மற்றும் மசாலாப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது, இதனுடைய அறிவியல் பெயர் ட்ரச்சிஸ்பெர்மம் அம்மி (Trachyspermum ammi). மேலும் இதனுடைய தமிழ் பெயர் ஓமம் ஆகும். அஜ்வைன் என்றழைக்கப்டும் இந்த ஆரோக்கியத்திற்கு நல்லது.
ஓமம் – Ajwain Meaning in Tamil:
நம் வீட்டு சமையலறையில் பலவகையான மசாலா பொருட்கள் இடம் பெற்றிருக்கும். அவற்றில் ஓன்று தான் இந்த ஓமம்.
ஓமம் நம் உடலுக்கு ஏராளமான நற்பலன்களை தருகிறது. அதிலும் இதனை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டால் அதில் இருந்து கிடைக்கும் பயன்கள் ஏராளம்.
ஓமம் மார்பு சளியை நீக்குகிறது.
மேலும் ஓமத்தில் ஆன்டி-ஆக்சிடண்டுகள், நோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்து கண்டப்படுகிறது.
உடன்பு வலுப்பெற மற்றும் ஆற்றல் அதிகரிக்க ஓமத்தை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் சிறிது கருப்பட்டி சேர்த்து குடிக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இது மட்டும் இல்லாமல் தலைவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு ½ தேக்கரண்டி ஓமத்தை கொதிக்கவைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும்.
மேலும் நொதிகள் செரிமானத்தை துரிதப்படுத்துவது, அஜீரண கோளாறு, வயிறு உப்புசம், வாய் துர்நாற்றம் சரி செய்ய உதவுகிறது.
முக்கியமாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஓமத்தை தண்ணீரில் ஊறவைத்து அதனை பருகி வந்தால் நல்ல பலன்களை பெறலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
Intimidating என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |