அறம் என்பதின் அர்த்தம் என்ன தெரியுமா?

Advertisement

அறம் பொருள்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் அறம் என்றால் என்னவென்றுதான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாக இந்த உலகில் தெரிந்துகொள்வதற்கு அதிகமான வார்த்தைகளும், அதற்கான அர்த்தங்களும் அதிக அளவில் இருந்துவந்தாலும், ஆனால் நம்மில் சிலர் அதை என்னவென்று தெரிந்துகொள்ளாமல் அதனுடைய அர்த்தங்களை உபயோகித்து கொண்டு வருகிறோம். மேலும் அறத்தின் அர்த்தம் என்ன, அவை எதற்காக தமிழில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று  நம் பதிவில் தெளிவாக படித்து அறியலாம் வாங்க.

மால்வேர் என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா

 

அறம் என்பதன் பொருள் | aram meaning in tamil:

அறம் என்ற சொல்லுக்கு தர்மம், கடமை, தியானம், புண்ணியம், ஞானம், நல்வினை, தருமதேவதை, அறக்கடவுள், அறச்சாலை, நோன்பு என்று பொருளை உரைக்கின்றது அகராதி என்றும் கூறப்படுகிறது.  அதோடு இந்து சமயக் கருத்தாக்கவியலில் அறம், பொருள், இன்பம், வீடு  ஆகிய நான்கும் நாற்பொருள்கள் அல்லது நாற்புருடார்த்தம் என்றும் கூறப்படுகிறது.

நிலையான உண்மையுடனும், உணர்வுகளுடனும் இருப்பது தான் அகராதி என்றும் சொல்லப்படுகிறது. இதுவே அறம் என்றும் அழைக்கப்படுகிறது  மேலும் அறம் என்பது ஒழுக்கத்தையும் குறிக்கும். அதோடு காலம், பண்பாடுகள் இவற்றை கொண்டு அறமானது வேறுபடுகிறது.

அறம் என்பது ஒருவர் சமுதாயத்தில் எவ்வாறு ஒழுக்க முறைகடலுடன் நடக்க வேண்டும் என்பதை பற்றி கூறும் ஒரு பொருள் ஆகும். இவை நல்லவை தீயவை என இரண்டு தொடர்புகளையும் கொண்டுள்ளது, அதோடு தமிழ் நூல்களில் உள்ள வாழ்த்து பாடல்களிலும், திருக்குறளிலும் இந்த அறமானது இடம்பெற்றுள்ளது.

அறம் என்பதன் விளக்கம்:

அறம் என்பதற்கான சில சிறப்பான பொருள்களை பற்றி அவை எவ்வாறு ஒரு பொருளில் இடம் பெற்று வருகிறது என்று தெளிவாக காணலாம்.

 • அன்பாய் இருப்பது அறம்
 • இனிமையாய்ப் பேசுவது அறம்
 • கடுஞ்சொற்களைத் தவிர்ப்பது அறம்
 • நல்லதையே நாடுவது அறம்
 • தூய துறவியரைப் பேணுவது அறம்
 • மானத்துடன் வாழ்வது அறம்
 • உயிருக்கு ஊக்கம் தருவது அறம்
 • அருள் வழியில் ஆண்டவனை உணர்த்துவது அறம்
 • மனதில் குற்றமற்று இருப்பது அறம்
 • பொய்யைத் தவிர்ப்பது அறம்
 • சினத்தைத் தவிர்ப்பது அறம்
 • பொறாமை உணர்ச்சியைத் தவிர்ப்பது அறம்
 • பிறருக்குக் கெடுதல் செய்யாமை அறம்
 • பிறருடன் பகிர்ந்து உண்பது அறம்
 • பிற உயிர்களைக் கொல்லாமை அறம்
 • தீமையில்லாத வழியில் பொருளீட்டுவது அறம்
 • இல்லற வாழ்வில் ஈடுபடுவது அறம்
 • அறநூல்களைக் கற்று அடக்கமுடன் இருப்பது அறம்

திருக்குறள் கூறும் அறம்:

உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்கும் திருக்குறளின் அறத்தின் கருத்துக்களை திருக்குறள் மூலம் காணலாம்.

எடுத்துக்காட்டு:1

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

இந்த திருக்குறளில் ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் கடும்சொற்கள், பொறாமை, தீய குணங்கள் போன்றவற்றை முழுமையாக நீக்கி விட்டு வாழ்வதே அறம் என்று சொல்லப்படுகிறது.

எடுத்துக்காட்டு:2

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்

இந்த திருக்குறளின் மூலம் ஒருவன் செய்ய கூடிய எல்லாவிதமான செயல்களையும் அறவழியில் செய்வதே நல்லது என்றும் சொல்லப்படுகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement