அறம் செய்ய விரும்பு என்பதன் பொருள் என்ன?

Advertisement

அறம் செய்ய விரும்பு என்பதன் பொருள் – Aram Seiya Virumbu Meaning in Tamil

பொதுநலம்.காம் வாசகர்களுக்கு வணக்கம் தினமும் புதிது புதிதான விஷயங்களையும், பயனுள்ள தகவல்களையும், ஆரோக்கியம், சமையல், தொழில்நுட்பம், வியாபரம், விவசாயம், செய்திகள் என்று நிறைய வகையான பதிவுகளை பதிவு செய்து வருகின்றோம் அவற்றில் ஓன்று தான் அர்த்தம். இன்றைய அர்த்தம் பதிவில் நாம் தெரிந்துகொள்ள இருப்பது அறம் செய்ய விரும்பு என்பதன் பொருள் என்ன? என்பதை பற்றித்தான்.

ஆக பதிவை முழுமையாக படித்து இந்த ஔவையார் சொல்லிய அறம் செய்ய விரும்பு என்ற வாரத்துக்கு என்ன அர்த்தம் என்று அறிந்து கொள்ளுங்கள். சரி வாங்க பதிவிற்குள் செல்வோம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வசம்பை தூக்கி வாயில வைக்க என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா?

அறம் செய்ய விரும்பு என்பதன் பொருள் என்ன?

அறம் செய்ய விரும்பு என்பதன் பொருள் என்னவென்றால் “தனி மனித ஒழுக்கம்” கடைப்பிடிக்க விரும்பு என்பதை தான் குறிக்கிறது.

விளக்கம்:

நமக்கு பொதுவாக எதாவது ஒரு விஷயத்தில் அதிக விருப்பம் இருக்கும். அது இசை, இலக்கியம், வித விதமான உணவு வகைகளை சமைப்பது/ உண்பது, புது புது இடங்களுக்கு சென்று பார்ப்பது, வித விதமான உடைகளை அணிவது என்று எதுவாக வேண்டுமானாலும் நமக்கு விருப்பமான விஷயமாக இருக்கும்.

அந்த விருப்பமான ஒரு விஷயத்திற்காக நாம் நம் நேரத்தை எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வோம், பணத்தை செலவு செய்வோம், அதை பற்றி நம் நண்பர்களிடம் பெருமையாக கூறுவோம். அந்த அளவிற்கு நாம் அதில் மூழ்கி இருப்போம் இருப்போம்.

மேலும் மேலும் அதில் புதிதாக என்ன இருக்கிறது என்று ஆராய்வோம். புதுசா கெஜட் வந்து இருக்கிறதாமே, புது டிசைனில் ஆடை வந்து இருக்கிறதாமே என்று நமக்கு பிடித்த விஷத்தை தேடி போய் வாங்குவோம். எது நமக்கு விருப்பமானதோ அது நம் சிந்தனையைஎப்போதும் ஆக்ரமித்துக் கொண்டே இருக்கும்.

நமக்கு விருப்பமான செயலை செய்வதில் நமக்கு ஒரு வருத்தமோ சோர்வோ தெரியாது மகிழ்ச்சியாக செய்வோம். எனவே, ஔவை பாட்டி சொன்ன அறம் செய்ய விரும்பு என்று வார்த்தைக்கு.

ஒரு விஷயத்தை விரும்பினால், மகிழ்ச்சியாக அறம் செய்வோம், மீண்டும் மீண்டும் செய்வோம், தேடி தேடி போய் செய்வோம்.

அறம் என்பதற்கு நம் விருப்பமான விஷயங்களை செய்வது மட்டும் பொருள் அல்ல… அற வழியில் நிற்றல் அதாவது ஒழுங்கான, தர்ம வழியில் நிற்றல் என்று பொருள். அற வழியில் நிற்க விருப்பப் பட வேண்டும். எனவே அறம் செய்ய விரும்புங்கள். ஆக நீங்கள் விரும்பும் செயலானது ஒழுக்கமான தர்மமானதாக இருக்க வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பத்துக்கு மேல் பத்தினி இல்லை என்ற பழமொழியின் அர்த்தம் தெரியுமா?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement