Arandavanukku Irundathellam pei Meaning in Tamil | அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் விளக்கம்
நாம் வீட்டில் ஏதாவது ஒன்றை பார்த்து பயந்து விட்டோம் என்றால் உடனே வீட்டில் உள்ளவர்கள் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வார்கள்..! இப்படி நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஏதாவது ஒரு விளக்கங்களை கொடுத்துகொண்டும் பழமொழி சொல்லிக்கொண்டும் இருப்பார்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள். அப்படி உங்கள் வீட்டில் சொல்லும் பழமொழிகளுக்கான விளங்களை தெரிந்துகொள்ள நினைத்தால் Pothunalam.com பதிவில் தெரிந்துகொள்ளவும்.
அந்த வகையில் இன்றைய பதிவில் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற பழமொழிக்கான உண்மையான அர்த்தம் என்ன என்பதை பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். இந்த பழமொழியை நாம் பிறர் கூற கேட்டு இருப்போம். அனால், அதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்:
ஒருவனின் மனம் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது எதை பார்த்தாலும் அவனுக்கு பயம் கொள்கிறான். எந்த இருட்டை கண்டாலும் அந்த பேயின் நியாபகம் வந்துவிடுகிறது..! உண்மையில் அங்கு பேய் பிசாசு எதுவும் இல்லை. பயத்தினால் மட்டுமே அவன் பயம் கொள்கிறான். இதை தான் அவர்கள் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்கிறார்கள்.
இன்னும் தெளிவாக சொல்லபோனால், எந்நேரமும் பயத்தில் இருப்பவனுக்கு இருட்டை கண்டால் மிகவும் பயம். இருட்டில் பேயோ பிசாசோ இருக்கிறது என்று நினைத்து பயம் கொள்வான். ஆனால், அங்கு பேயோ பிசாசோ இல்லை. பயத்தின் காரணமாக அவன் மனம் பேயை பற்றி கற்பனை செய்து கொண்டே இருக்கிறது.இதனை தான் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று கூறுவார்கள்.
பயம் அல்லது அச்சம் என்பது ஒருவர் மனதில் தேவையற்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே, பயம் நமது மனதை விட்டு நீங்கினால் வீண் பிரமைகள் ஏற்படாது.
கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதன் அர்த்தம் என்ன
விருந்தும் மருந்தும் மூணு நாள் தான் என்று சொல்லும் பழமொழிக்கு அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |