ஆர்கன் ஆயில் என்றால் என்ன?

Advertisement

ஆர்கன் எண்ணெய் என்றால் என்ன?

நண்பர்களுக்கு வணக்கம்.. பொதுவாக நாம் சமையல் செய்வதற்கு அதிக அளவு பயன்படுத்தும் ஒரு பொருள் தான் எண்ணெய் எண்ணெய்யில் பல வகைகள் உள்ளது. ஒவ்வொரும் ஒவ்வொரு வகையான நன்மைகளை கொண்டது. அவற்றில் ஓன்று தான் இந்த ஆர்கன் எண்ணெய்.

இன்றைய பதிவில் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் ஆர்கன் எண்ணெய் என்றால் என்ன? அது எதற்கு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்த தகவலை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். ஆக பதிவை முழுமையாக படுத்து பயன்பெறுங்கள்.

Argan Oil in Tamil

Argan Oil

ஆர்கன் ஆயில் எனப்படும் இந்த ஆயில் மொராக்கோவைத் தாயகமாகக் கொண்ட ஆர்கன் மரத்தின் கொட்டைகளில் உள்ள விதைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை எண்ணெய் ஆகும்.

இது பல நூற்றாண்டுகளாக மொராக்கோ உணவு வகைகளிலும் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அதன் பல்வேறு ஆரோக்ய நன்மைகள் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது.

 எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

ஆர்கன் மரத்தில் காய்க்கும் பழங்களின் கொட்டைகளை உடைத்து அதனுள் இருக்கும் விதைகளில் இருந்து ஆர்கன் எண்ணெய் எடுக்கப்படுகிறது.

ஆர்கன் ஆயிலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:

  • வைட்டமின் ஈ
  • மேகா-6 மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
Jojoba oil பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

ஆர்கன் ஆயில் பயன்கள் – Argan Oil Benefits in Tamil:

  1. சருமத்தை என்றும் ஈரப்பதமாக வைத்துக்கொள்ள இந்த ஆர்கன் எண்ணெய் பயன்படுகிறது.
  2. ஆர்கன் எண்ணெய் முடிக்கு நன்மை பயக்கும், ஏனெனில் இது முடியை ஈரப்பதமாக்குவதற்கும் வலுப்படுத்துவதற்கும் உதவும்.
  3. ஆர்கன் ஆயிலில் உள்ள நல்ல கொழுப்புகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து இரத்த அழுத்தத்தை மேம்படுத்துவதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
  4. சில ஆய்வுகள் ஆர்கான் எண்ணெயில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் இருக்கலாம் என்று கூறுகின்றன.
  5. ஆர்கன் எண்ணெய் காயம் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டிருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. மேலும் சிறிய வெட்டுக்கள் மற்றும் சிராய்ப்புகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement