Assalamu Alaikum Meaning in Tamil
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவின் வாயிலாக நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவலை பற்றி தான் பார்க்கப்போகின்றோம். அதாவது பொதுவாக நம் உடன் இருக்கும் சிலர் பேசும் வார்த்தைகளுக்கு நமக்கு அர்த்தம் தெரியாது. அதிலும் இஸ்லாமியர்கள் பேசும் வார்த்தைகளுக்கு நமக்கு அர்த்தம் அவ்வளவாக தெரியாது. அதாவது இஸ்லாமியர்கள், அவர்களின் பெற்றோர்களை கூட வெவ்வேறு விதமாக தான் கூப்பிடுவார்கள்.
அதாவது உதாரணத்திற்கு எனக்கொரு இஸ்லாமிய நண்பர் இருந்தார். அவர் அவருடைய தந்தையை அப்பா என்று அழைக்காமல், அத்தா என்று அழைப்பார். இப்படி உறவுகளை வேறு வார்த்தைகள் சொல்லி அழைப்பார்கள். அந்த வகையில் முஸ்லீம்கள் சொல்லும் வார்த்தை தான் அஸ்ஸலாமு அலைக்கும். இந்த வார்த்தையை ஏன் அவர்கள் அடிக்கடி கூறுகிறார்கள் என்று நம் அனைவருக்குமே ஒரு கேள்வி இருந்திருக்கும். அதனால் அஸ்ஸலாமு அலைக்கும் என்பதற்கு அர்த்தம் என்னவென்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
அஸ்ஸலாமு அலைக்கும் அர்த்தம் என்ன:
பொதுவாக இஸ்லாமியர்கள் யாரையாவது பார்த்தால் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வதை நாம் பார்த்திருப்போம். அதுபோல அப்படி சொல்லியும் கேட்டிருப்போம். ஆனால் அதற்கு என்ன அர்த்தம் என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் அதன் அர்த்தத்தை பற்றி தற்போது காணலாம்.
பொதுவாக அஸ்ஸலாமு அலைக்கும் என்பது இஸ்லாமிய வாழ்த்து ஆகும். பொதுவாக இந்த வார்த்தையானது ஆங்கிலத்தில் சலாம் அலைக்கும் என மொழிபெயர்க்கப்படும்.
இந்த அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் அர்த்தம் “உங்கள் மீது அமைதி (சாந்தி) உண்டாகட்டும்” என்பதாகும்.
அதுபோல ஒரு முஸ்லீம் முதன் முதலில் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று மற்றவரை பார்த்து வாழ்த்து சொல்லினால், அதற்கு அவரும் பதிலுக்கு “வா அலைக்கும் ஸலாம்” என்று வாழ்த்து கூறுவார்.
இந்த “வா அலைக்கும் ஸலாம்” என்று சொல்வதற்கு அர்த்தம் “உங்கள் மீதும் அமைதி (சாந்தி) உண்டாகட்டும்” என்பதாகும்.
இதன் காரணமாக தான் இஸ்லாமியர்கள் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்கள்.
ரம்ஜான் நோன்பு இருப்பவர்கள் இந்த விதிமுறைகளை Follow பண்ணுங்க..
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |