Aura Meaning in Tamil | ஆரா என்றால் என்ன?

Advertisement

Aura Meaning in Tamil

நம்முடைய தமிழ்நாட்டில் தமிழ் மொழி என்பது முக்கியமானதாக இருக்கிறது. அதுவே வேற நாட்டிற்கு சென்றால் நம்முடைய தமிழ் மொழியை வைத்து கருத்துக்களை கூறினால் அவர்களுக்கு புரியுமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. நம்முடைய நாட்டில் தாய்மொழி எப்படி தமிழோ அதுபோல அந்த நாட்டிற்கும் தாய்மொழி வேறு இருக்கும். ஒவ்வொரு நாட்டிற்கும் உள்ள தாய்மொழியை அறிந்து கொள்ள முடியாது. எல்லாவற்றிக்கும் அடிப்படையாக இருக்கும் ஆங்கில மொழியை கற்று கொள்ளலாம்.

ஆங்கில மொழியை கற்று கொள்ள வேண்டும் என்றால் அதற்கு சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் இது போல சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வதன் மூலம் ஆங்கிலத்தில் பேசுவதற்கு உதவியாக இருக்கும். அந்த வகையில் நம்முடைய பதிவில் நிறைய வகையான வார்த்தைகளுக்கு அர்த்தத்தை பதிவிட்டு வருகிறோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் aura என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

Aura Meaning in Tamil:

Aura என்பது மின்காந்த சக்தி, மின்சார சக்தி, ஒளி அல்லது ஒளி ஆற்றல் என்பது அர்த்தமாக இருக்கிறது. இதனை அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் குறிக்கலாம். அதனை பற்றி கீழே காண்போம்.

Human Aura Meaning in Tamil | Aura Energy Meaning in Tamil

Human aura meaning in tamil

மனிதர்கள் என்ற வகையில் நம் உடலினுல் குறிப்பிடத்தக்க அளவிலான சிறு தொகையில் மின்சாரத்தினை உருவாக்கிக் கடத்தச் செய்கின்றது. அந்த மின்னோட்டத்தின் காரணமாக நம் உடலை சுற்றி ஒரு காந்தப்புலன் உருவாகின்றது. இவ்வாறு உருவாகும் மின் காந்தப்புலனே ஆரா என்றழைக்கப்படுகின்றது. இந்த சக்தி ஆனது நம் உடலை சுற்றி முட்டை வடிவத்தில் 2 அல்லது 3 கிலோ மீட்டர் வரை காட்சியளிக்கும். இதனின் நிறங்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, கருப்பு மற்றும் வெள்ளை போன்ற பலவகைகள் இருக்கிறது. இவை பெரும்பாலும் நம்முடைய குணத்தை வைத்து நிறங்கள் மாறுபடும்.

Sawadee Ka Meaning in Tamil

பயிற்சிகள் செய்வதன் மூலம் நம்மால் aura ஒளியை காணவும் முடியும், உணரவும் முடியும். நெனெகல் பயிற்சிகள் இல்லமல் aura இலையை காண வேண்டுமென்றால் ஆரா ஸ்கேனர் என்ற கருவி மூலம் நம்முடைய உடலில் aura சக்தி எந்தளவிற்கு உள்ளது என்பதை கண்டறிய முடியும்.

மனிதனின் உடம்பில் இருந்து, ஆரா சக்தியானது கண்கள் மற்றும் உள்ளங்கை, உள்ளங்கை ,மற்றும் கால்கள் வழியாக வெளியாகிறது.

புராதன ஹிந்து மத நூல்களான வேதங்களின் படி ஆரா என்பது உடலில் பல்வேறு நிலைகளில் காணப்படும் ஆன்மீக சிந்தனைகள், உணர்வுகள், எண்ணங்கள், போன்றவற்றின் ஏழு அடுக்குகள் என்று நம்பப்படுகின்றது. இந்த ஏழு அடுக்குகள் ஒன்றையொன்று மனிதனின் உடல் ஆரோக்கியத்தின் பொருட்டு ஆதிக்கம் செலுத்திக் கொள்ளும் என்றும் நம்பப்படுகின்றது.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement