Bank Meaning in Tamil..!
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் Bank என்றால் என்ன..? Bank பற்றிய முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள போகிறோம். இன்றைய நிலையில் Bank இல்லாத ஊர்களே இல்லை. அனைத்து நாடுகளிலும் Bank ஒரு சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. Bank மக்களுக்கு நிதி சேவைகளை வழங்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டது. இந்த வங்கி என்ற நிறுவனம் கொல்கத்தாவில் உள்ள இந்திய வியாபாரிகளால் 1839 ஆம் ஆண்டு முதல் யூனியன் வங்கியை நிறுவினார்கள். வங்கி பற்றி மேலும் சில தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ வங்கிகளில் பயன்படுத்தப்படும் RTGS சேவை பற்றி உங்களுக்கு தெரியுமா
வங்கி என்றால் என்ன..?
வங்கி என்பது நிதி கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்ற ஒரு நிதி நிறுவனம் ஆகும். அதாவது, பணப் பரிவர்த்தனை மற்றும் பணப் பரிமாற்றம் போன்ற சேவைகளை தரும் நிறுவனம் ஆகும். வங்கி என்பதை வைப்புத்தொகை மற்றும் கடன் வழங்க உரிமம் பெற்ற நிதி நிறுவனம் என்றும் கூறலாம்.
இந்த வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் சேமிப்பினை ஊக்குவித்தல் போன்ற நிதி சேவைகளை மக்களுக்கு வழங்குகிறது. இது பாதுகாப்பான வைப்புத்தொகை மற்றும் நாணயப் பரிமாற்றம் போன்ற பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றது.
நம் நாட்டில் முதலீட்டு வங்கிகள் முதல் கார்ப்பரேட் வங்கிகள் வரை பலவகையான வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. நம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் இந்திய ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் 21 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் உள்ளன.
இந்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு பணம் வழங்குதல் மற்றும் சேகரிப்பு முகவர்கள் ஆகிய இரண்டிலும் செயல்படுகின்றன. இந்த வங்கிகள் அனைத்தும் காசோலைகள் மற்றும் ரூபாய் நோட்டுகள் அல்லது வாடிக்கையாளரின் உத்தரவின் படி பணம் வழங்குதல் போன்ற நிதி சேவைகளை மக்களுக்கு வழங்குகின்றது.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ NEFT என்றால் என்ன..?
வங்கிகளின் வகைகள்:
நம் நாட்டில் மொத்தம் 2 முக்கியமான வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. அவை,
திட்டமிடப்பட்ட வங்கி:
இந்த திட்டமிடப்பட்ட வங்கியானது 1934 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டமிடப்பட்ட வங்கி அமைப்பில் ரிசர்வ் வங்கி அடங்குகிறது. இந்த வங்கிக்கான தகுதியை பெற குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது.
வணிக வங்கி:
இந்த வணிக வங்கி முறையானது 1949 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும். இது பொதுவாக லாபம் ஈட்டும் வங்கிகள் என்று கூறப்படுகிறது. பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது மற்றும் கடன்களை வழங்குவது இதன் முக்கிய பணியாகும்.
இந்த வணிக வங்கிகள் 4 வெவ்வேறு வகைகளில் உள்ளன. அவை,
- பொதுத்துறை வங்கி
- தனியார் துறை வங்கி
- வெளிநாட்டு வங்கி
- பிராந்திய கிராமப்புற வங்கி
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |