BNYS என்பதன் விளக்கம்

Advertisement

BNYS Full Form in Tamil 

இன்றைய பதிவில் BNYS என்பதற்கான விளக்கத்தை பற்றி தான் பார்க்க போகின்றோம். இது ஒரு மருத்துவபடிப்பாகும். MBBS மட்டும் மருத்துவர்களுக்கான படிப்பு அல்ல MBBS-ஐ தாண்டி நிறைய மருத்துவ படிப்புகள் உள்ளது அதில் ஒன்று தான் இந்த BNYS. தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இந்தக் கல்வி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த மருத்துவ படிப்பிற்காக பத்தொன்பது கல்லூரிகள் உள்ளன. இந்த 19 கல்லூரிகளில் இரண்டு அரசு நிறுவனங்களிலும் BNYS இல் படிக்க 160 இடங்கள் உள்ளன. இதேபோல் மீதமுள்ள 17 தனியார் கல்லூரிகளில் 1550 இடங்கள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இந்த படிப்பில் சேர மாணவர்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/48Smee9

BNYS தமிழ் விளக்கம் 

BNYS: Bachelor of Naturopathy and Yogic Sciences, இதனை தமிழில் இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் இளங்கலை என்று சொல்வார்கள்.

இந்த படிப்பானது 4.5 ஆண்டு படிக்கும் பாடத்திட்டம் ஆகும். இந்த படிப்பில் ஆரோக்கியத்திற்கான விரிவான அணுகுமுறைக்கான யோகா மற்றும் மாற்று சிகிச்சை நுட்பங்களை பற்றி தெளிவாக கற்றுக்கொள்ளலாம். 

BNYS in Tamil 

Naturopathy

இயற்கை மருத்துவம் என்பது உடல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் ஒரு மருத்துவ தத்துவமாகும், இது உடலின் உள்ளார்ந்த ஆற்றலைக் காட்டுவது மற்றும் நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, மசாஜ் மற்றும் உணவுப் பழக்கங்களைச் சரிசெய்தல் போன்ற இயற்கை சிகிச்சைகளைப் பயன்படுத்துகிறது.

Yogic Sciences

உடல், மன மற்றும் உணர்ச்சி நல்வாழ்வை மேம்படுத்த, இது ஆசனங்கள் (தோரணைகள்), பிராணயாமா (சுவாசப் பயிற்சிகள்), தியானம் மற்றும் தளர்வு முறைகள் போன்ற யோகப் பயிற்சிகளை ஒருங்கிணைக்கிறது.

இந்த படிப்பு MBBS- நிகரான படிப்பாகும். பொதுவாக இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆயுஷ் அமைச்சகம் ஏற்றுக் கொள்ளும். இந்த படிப்பு படித்தால் மருத்துவம் படித்து செய்யக்கூடிய அனைத்து சேவைகளையும் செய்யலாம். இது நாம் பயன்படுத்தும் பாரம்பரிய சிகிச்சை முறையாகும்.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement