Braille Meaning in Tamil
பெரும்பாலானவர்களுக்கு நம்முடைய தாய் மொழியான தமிழ் மொழியை தவிர மற்ற மொழியையும் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஏனென்றால் மற்ற நாடுகளுக்கு செல்லும் போது தாய்மொழி தெரியாது, அதனால் அடிப்படையாக இருக்கும் ஆங்கில மொழியை அறிந்து கொள்வது அவசியம்.
ஆங்கில மொழியை கற்று கொள்வதற்கு முன் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்திருப்பது அவசியம். அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் Braille என்பதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
Braille Meaning in Tamil:
நம்மால் கொஞ்ச நேரம் கண்ணை மூடி நம்முடைய வீட்டை சுற்றி வாருங்கள் என்றாலே முடியாது. ஆனால் பார்வையற்றவர்கள் இந்த உலகத்தில் வாழ்வது கஷ்டமான ஒன்றாகும். ஆனாலும் அவர்கள் கொஞ்ச கொஞ்சமாக எல்லா வேலைகளையும் பழகி கொள்கிறார்கள். ஆனால் அவர்களால் கல்வியை மட்டும் கற்க முடியவில்லை.
Hive என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் இதுதானா..?
Braille என்பது மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்ட எழுத்துமுறை சாதனமாகும். இவை மேடான புள்ளிகள் கொண்ட பிரெய்லி எழுத்து முறை வடிவமைக்கப்பட்டு அறிமுகமானது. பிரான்ஸ் நாட்டின் லூயிஸ் பிரெய்லி கண்டுபிடித்த பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான எழுத்துரு சாதனம் இன்று உலகளவில் பயன்படுத்தும் எழுத்துருவாக இருக்கிறது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூயிஸ் பிரெயிலி 1809-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி பாரிஸ் அருகே உள்ள கூப்ரே என்ற ஊரில் பிறந்தார். இவர் பிறந்த தினத்தையே சர்வதேச பிரெயிலி தினமாக கொண்டாடப்படுகிறது.
லூயிஸ் பிரெய்லி அவருக்கு 15 வயது இருக்கும் போதே 6 படைப்புள்ளிகள். ஓட்டைகள் இசைக்குறியீடு கொண்ட எழுத்துருவை உருவாக்கினார். இவை கண்டுபிடித்த எழுத்துருவை பயன்படுத்தியே மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். இவருக்கு 40 வயது இருக்கும் போது காச நோய் பிரச்சினையினால் ஆசிரியர் பணியை விட்டு நீஙகினார். இந்த பிரச்சனையினால் 1852 அன்று இந்த உலகை விட்டு பிரிந்தார்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |