Carpooling Meaning in Tamil
தினமும் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். இன்று நாம் இந்த பதிவின் வாயிலாக Carpooling Meaning in Tamil பற்றி தான் பார்க்கப்போகின்றோம். சரி உங்களுக்கு Carpooling என்றால் என்ன என்று தெரியுமா..? பொதுவாக நாம் அனைவருமே இந்த வார்த்தையை அதிகம் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதனால் இந்த பதிவின் வாயிலாக Carpooling என்றால் என்ன..? என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க.
காரில் சிறிதாக மாற்றம் செய்வதற்கு முன்னால் இதை தெரிஞ்சிக்கோங்க..
Carpooling என்றால் என்ன..?
பொதுவாக கார்பூல் அல்லது கார்பூலிங் என்பது கார் பயணங்களின் பகிர்வு ஆகும். இதனால் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரே காரில் பயணம் செய்கிறார்கள். மேலும் மற்றவர்கள் தாங்களாகவே ஒரு இடத்திற்கு ஓட்ட வேண்டிய அவசியத்தைத் தடுக்கிறது. கார்பூலிங் என்பது Demand-Responsive Transport (DRT) சேவையாகக் கருதப்படுகிறது.
அதிக மக்கள் ஒரே வாகனத்தைப் பயன்படுத்துவதன் மூலம், கார்பூலிங் ஒவ்வொரு நபரின் பயணச் செலவுகளையும் குறைக்கிறது என்று சொல்லப்படுகிறது.
இந்த கார்பூலிங் சேவையின் காரணமாக எரிபொருள் செலவுகள், சுங்கச்சாவடிகள் மற்றும் வாகனம் ஓட்டும்போது ஏற்படும் மன அழுத்தம் இவரை அனைத்தும் குறைகிறது. கார்பூலிங் என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான பயணமாகும். ஏனெனில் பயணங்களைப் பகிர்வதன் மூலம் காற்று மாசுபாடு, கார்பன் வெளியேற்றம், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் இடங்களின் தேவை ஆகியவை குறைக்கப்படுகின்றன.
கார்லையே சீட் பெல்ட் இருக்கு.. ட்ரெயின்ல ஏன் இல்ல..? காரணம் தெரியுமா..
இதன் காரணமாக தான் பல இடங்களில் கார்பூலிங் சேவை அதிகரித்து வருகிறது. அதுபோல அதிகாரிகள் பெரும்பாலும் கார்பூலிங்கை ஊக்குவிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அதிக மாசுபாடு அல்லது அதிக எரிபொருள் விலை காலங்களில் தான் இந்த கார்பூலிங் அதிகரிக்கிறது.
எனவே எரிபொருள் செலவுகளையும், சாலை நெரிசல்களையும் தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சேவை தான் இந்த கார்பூலிங்.
கார்பூலிங் தோன்றிய இடம்:
கார்பூலிங் முதன் முதலில் அமெரிக்காவில் இரண்டாம் உலகப் போரின் போது ஒரு ரேஷன் தந்திரமாக முக்கியத்துவம் பெற்றது. இரண்டாம் உலகப் போரின் போது “கார் கிளப்புகள்” அல்லது “கார்-ஷேரிங் கிளப்புகள்” மூலம் தொடங்கியது.
2009 ஆம் ஆண்டில், கார்பூலிங் என்பது அமெரிக்காவில் உள்ள அனைத்துப் பயணங்களிலும் 43.5% மற்றும் பயணங்களில் 10% ஆகும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |