Chauvinist தமிழ் அர்த்தம் | Chauvinist Meaning In Tamil
Chauvinist என்ற சொல்லுக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள். நாம் Chauvinist என்ற சொல்லை மிகவும் பயன்படுத்தியிருப்போம் ஆனால் அதற்கான அர்த்தம் என்ன என்று நமக்கு தெரியாது. நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வார்த்தைக்கான அர்த்தங்கள் என்ன என்பதை யோசிப்பதே இல்லை. நாம் பயன்படுத்தும் சொல்லுக்கான அர்த்தத்தை தெரிந்துகொள்ளுங்கள். Chauvinist என்ற சொல்லுக்கான அர்த்தத்தை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக பாருங்கள்.
Male Chauvinist மற்றும் Female Chauvinist என்ற வார்த்தைகளை நாம் கேட்டிருப்போம் ஆனால் அதற்கான அர்த்தம் என்ன என்பது நமக்கு தெரியாது. நாம் நிறைய இடங்களில் Chauvinist வார்த்தையை கேட்டிருப்போம் புக்தகங்களில் பார்த்திருப்போம். நாம் அந்த வார்த்தையை பயன்படுத்திருப்போம் ஆனால் அதற்கான அர்த்தத்தை நாம் யோசிப்பதில்லை. இனிமேல் நாம் பயன்படுத்தும் வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிந்துகொண்டு பயன்படுத்துவோம் தெரியாதவர்களுக்கும் சொல்லி கொடுப்போம்.
Chauvinist Meaning In Tamil:
Chauvinist என்றால் ஒரு நபர் தனது சொந்த வகையின் மேன்மையில் பாரபட்சமான நம்பிக்கை கொண்டவர் என்று அர்த்தம். Chauvinist என்றால் பேரினவாதி என்று அர்த்தம். பேரினவாதம் என்பது ஒருவரின் சொந்தக் குழு அல்லது மக்களின் மேன்மை அல்லது மேலாதிக்கத்தில் நியாயமற்ற நம்பிக்கையாகும். அவர்கள் வலிமையானவர்களாகவும் நல்லொழுக்கமுள்ளவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள், மற்றவர்கள் பலவீனமானவர்கள், தகுதியற்றவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் என்று கருதப்படுகிறார்கள்.
Chauvinist குணம் உடையவர்கள் அவர்கள் தான் நல்லவர்கள் நியாயமானவர்கள் என்றும் மற்றவர்கள் எல்லாம் பலவீனமானவர்கள் என்று கூறுகிறார்கள். இந்த குணம் உடையவர்கள் தான் செய்யுள் செயல் தான் சரி மற்றவர்கள் செய்வது தவறு என்று கூறுவார்கள்.
Chauvinist என்றால் மேலாதிக்கம் அல்லது பேரினவாதி என்று அர்த்தம்.
பேரினவாதி என்றால் என்ன?
பேரினவாதி என்றால் ஒரு இனங்களின் மத்தியில் தனித்தனியான இனங்களை உயர்த்தி மற்ற இனங்களை குறைகூறுவதாகும். இது பொதுவாக ஒரு இனத்தின் பண்புகளுக்கும் உரிமைகளுக்கும் முக்கியத்துவம் குடுத்து மற்ற இனங்களை புறக்கணிப்பதாகும்.
பேரினவாதம் என்றால் சமுக, அரசியல் மற்றும் பொருளாதார நிலைகளில் ஒரு இனத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதாகும். இது அடிப்படையாக ஒரு இனத்தை மற்ற இனத்தை விட மேலாக உயர்த்தி பேசும் மனப்பான்மை உடையதாகும்.
Male Chauvinist Meaning In Tamil:
Male Chauvinist என்றால் ஒரு ஆண் தனது பாலினத்தை உயர்த்தி பெண்களை கீழ்த்தனமாக நடத்துவது மற்றும் பெண்களை குறைவாக மதிக்கும் குணம் உடையவர்கள் Male Chauvinist. பொதுவாக பெண்களின் உரிமைகளுக்கு எதிராக நிற்கும் கொள்கை உடையவர்கள் தான் Male Chauvinist என்பவர்கள்.
Female Chauvinist Meaning In Tamil:
Female Chauvinist என்றால் ஒரு பெண் தனது பாலினத்தை உயர்த்தி ஆண்களை கீழ்த்தனமாக நடத்துவது மற்றும் ஆண்களை குறைவாக மதிக்கும் குணம் உடையவர்கள் Female Chauvinist. பொதுவாக ஆண்களின் உரிமைகளுக்கு எதிராக நிற்கும் கொள்கை உடையவர்கள் தான் Female Chauvinist என்பவர்கள். பெண்கள் தன் பாலினத்தை மட்டும் உயர்த்தி மற்ற பாலினத்தை குறைகூறுவதாகும்.
எடுத்துக்காட்டு:
- அவள் இப்போது ஒரு பேரினவாதியான ஒரு புதிய முதலாளியிடம் புகாரளிக்கிறாள்.
- நான் ஆண் பேரினவாதி அல்ல.
- போர் வெடித்தால் பேரினவாதக் காய்ச்சல் மக்களைப் பற்றிக்கொள்ளும்.
- அவர் ஒரு பிரபலமான ஆங்கில பேரினவாதி.
- அவர் ஒரு பழங்கால பேரினவாதி.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |