சேச்சி என்பது எதை குறிக்கிறது தெரியுமா.? | Chechi Malayalam Word Meaning in Tamil

Advertisement

Chechi Malayalam Word Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Chechi என்ற மலையாள வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். என்ன தாய் மொழியான தமிழ் மொழியில் பேசினாலும் கூட அதிலுள்ள வார்த்தைகள் தெரிந்தாலும் வேறு மொழியையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்கான தேடல்களும் இருக்க வேண்டும். மற்ற மொழியை கற்று கொள்வது கஷ்டம் என்று எண்னுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுவதும் கற்று கொள்ளா விட்டாலும் ஓரளவிற்கு பேசுவது போல் ஆவது கற்று கொள்ள வேண்டும்.

அதற்கு நீங்கள் முதலில் சின்ன சின்ன வார்த்தைகளுக்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். நாம் டிவியில் வேறு மொழியில் பேசுவதை கேட்டிருப்போம். அதற்கான அர்த்தத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அப்படி அதிகமாக சேச்சி என்ற வார்த்தையை கேட்டிருப்போம். இதற்கான அர்த்தத்தை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

சேச்சி என்றால் என்ன.? | Chechi Meaning in Tamil:

  • சேச்சி என்ற வார்த்தையை திரைப்படங்களில் அதிகமாக கேட்டிருப்பீர்கள். இந்த வார்த்தையானது மலையாள வார்த்தை என்று அனைவரும் அறிந்தது தான்.
  • இந்த சேச்சி என்ற வார்த்தையானது உறவு முறையை கூறும் மலையாள வார்த்தையாக இருக்கிறது.
  • சேச்சி என்பது மூத்த சகோதரி என்பதை குறிப்பிடுவதற்கு சொல்லப்படுகிறது.
  • மலையாளத்தில் கூறப்படும் சேச்சி என்ற வார்த்தைக்கு தமிழ் மொழியில் மூத்த சகோதரி என்பது அர்த்தமாக இருக்கிறது. அதாவது அக்காவை சேச்சி என்று அழைக்கிறார்கள்.

உறவுகள் பெயர்கள் தமிழ் மற்றும் மலையாளம்:

சேச்சி மீனிங் இன் தமிழ்

தமிழ்  மலையாளம் 
அன்னை அம்மா
தந்தை அச்சன்
சகோதரர் சஹோதரன்
மூத்த சகோதரர் சேட்டன் அல்லது எட்டன்
இளைய சகோதரர் அனியன்
சகோதரி சஹோதாரி
மூத்த சகோதரி சேச்சி
தங்கை அனியாத்தி

Chechi Meaning In English:

சேச்சி என்பதை ஆங்கிலத்தில் Elder Sister/ Older Sister என்று அழைக்கலாம்.

Chechi Meaning in Tamil with Example:

சேச்சி என்பது மலையாள மொழியில் “அக்கா” அல்லது “பெரிய சகோதரி” என்ற அர்த்தம். இது அதிகமாக கேரளாவில் பேசப்படும் ஒரு மரியாதையான அழைப்புச் சொல்.

மலையாளம்: சேச்சி, நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?

தமிழ்: அக்கா , நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?

மலையாளம்:அந்த ஹோட்டலில் பணிபுரியும் செரிவர் எனக்குத் தண்ணீர் கொடுத்துச் சேச்சி என அழைத்தார்.

தமிழ்: அந்த ஹோட்டலில் பணிபுரியும் வேட்டையாளர் என்னை அக்கா என்று அழைத்தார்

சேச்சி என்ற வார்த்தையை எங்கெல்லாம் அழைக்கலாம்:

சகோதரி அல்லது அக்காவுக்கு பதிலாக இந்த வார்த்தையை அழைக்கலாம்.

பெரிய பெண்களை மரியாதையாக அழைப்பதற்கு இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

 

381 என்பதற்கான தமிழ் பொருள் என்ன
Center Fresh என்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா 

 

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement