Claustrophobic Meaning in Tamil
பொதுவாக ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னாலும், பெயருக்கு பின்னாலும் ஒரு அர்த்தம் என்பது இருக்கும். ஆனால் அவற்றின் அர்த்தம் பற்றி நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது. அதிலும் குறிப்பாக ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை நாம் அதிகம் தெரிந்து வைத்திருக்க மாட்டோம். அந்த வார்த்தைகளை மற்றவர்கள் கூறும்போது தான் இதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவோம். எனவே அந்த வகையில், உங்களுக்கு பயனுள்ள வகையில் நம் பொதுநலம் பதிவில் தினமும் பல்வேறு ஆங்கில வார்த்தைகளுக்குக்கான தமிழ் அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அதேபோல், இன்றைய பதிவில் Claustrophobic என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை பதிவிட்டுள்ளோம்.
What is Claustrophobia in Tamil Meaning:
Claustrophobic என்பது ஒரு மூடிய இடம் பற்றிய பீதி(பயம்) ஆகும். இதனை தமிழில் தனிமையச்சம் என்றும் கூறலாம்.அதாவது, தனிமையச்சம் என்பது ஓரிடத்தில் பிறமனிதர்களின் துணை ஏதுமின்றி தனித்திருப்பதால் ஏற்படுகின்ற அச்சமாகும்.
சிலர், உயரத்தை கண்டால் பயப்படுவார்கள், நீர் நிலைகளை கண்டால் பயபடுவார்கள், ரயில் தண்டவாளங்களை கண்டால் பயபடுவார்கள்.. ஆகவே இதுபோன்ற பயங்களை ஆங்கிலத்தில் `போபியா’ (Phobia) என்று அழைப்பார்கள்.
இந்த `போபியா’வில் நிறைய வகைகள் உள்ளன. அதாவது அக்ரோபோபியா, ஏரோபோபியா, பிலோபோபியா, செரோபோபியா, கேமோபோபியா… எனப் பல வகை போபியாக்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்றுதான் கிளாஸ்ட்ரோபோபியா.
Rubric என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன.
கிளாஸ்ட்ரோபோபியா தெளிவான விளக்கம்:
சிலர் மூடப்பட்ட இடத்தின் உள்ளே இருந்தால் மிகவும் பயன்படுவார்கள். இதனை நாம் கிளாஸ்ட்ரோபோபியா என்று குறிப்பிடலாம். உதாரணமாக, சிலர் லிஃப்ட்டை கண்டாலே பயப்படுவார்கள். ஏனென்றால் லிஃப்ட் ஒரு மூடப்பட்ட அறை. அப்படி தப்பித்தவறி ஏறினால் கூட, இந்த லிஃப்ட் பாதியிலே நின்று விடுமோ அல்லது திறக்கமுடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உடலெல்லாம் வியர்த்துபோய் உயிரை கையில் பிடித்து கொண்டு இருப்பார்கள். இதற்கு பெயர் தான் கிளாஸ்ட்ரோபோபியா.
Agoraphobia என்ற வார்த்தைக்கான சரியான அர்த்தம் இதுதானா..
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |