சிஆர்எல் (CRL ) என்றால் என்ன? | CRL Meaning in Tamil

Advertisement

CRL என்பதன் அர்த்தம் என்ன?

நமது வலைதளத்தின் வாசகர்கள் அனைவர்க்கும் வணக்கம்.. இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் பதிவு CRL என்பதன் தமிழ் அர்த்தம் என்ன என்பது பற்றியது தான். இது ஒரு ஸ்கேன் ஆகும். இந்த ஸ்கேன் யாருக்கு எடுக்கப்படுகிறது? எதற்காக எடுக்கப்படுகிறது என்பது குறித்த தகவலை பற்றி இப்பொழுது நாம் அறியலாம் வாங்க..

CRL Meaning in Tamil:

CRL என்பது ஒரு ஸ்கேன் ஆகும். இது கர்ப்பமான பெண்களுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் ஆகும். இது எதற்காக எடுக்கப்படுகிறது என்றால் கருவின் நீளத்தை அளப்பதற்கு மற்றும் பிரசவ தேதியை கணக்கிடுவதற்கு ஆகிய விஷயங்களை அறிவதற்கு இந்த ஸ்கேன் முக்கியமாக எடுக்கப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
EDD என்றால் என்ன?

கர்ப்பகால ஸ்கேனில் சிஆர்எல் (CRL):

கர்ப்ப காலத்தில், கிரவுன்-ரம்ப் நீளம் (Crown rump length) ஸ்கேன் மூலம் குழந்தையின் கர்ப்பகால வயது மதிப்பிடப்படுகிறது. பொதுவாக கர்ப்பத்தின் துவக்கத்தில் உயிரியல் மாறுபாடு மிக அதிகமாக இருக்கும் காரணத்தினால் அச்சமயம் இந்த ஸ்கேன் செய்யப்படுகிறது.

CRL ஸ்கேன் குறித்து தகவல்:

கர்ப்ப கால ஸ்கேனில் சிஆர்எல் என்பது உட்கருவின் நீளம் மற்றும் உருப்பெற்ற கருவின் முனைகள் தவிர கருவின் நீளம் அளக்கப்படுகிறது.

குழந்தையின் வளர்ச்சி ஆறு அல்லது ஏழு வாரங்களை எட்டும் போது CRL ஸ்கேன் செய்யப்படுகிறது மற்றும் குழந்தைக்கு 14 வாரங்கள் ஆகும் வரை இதை மேற்கொள்ளலாம். CRL-இன் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் எவ்வளவு முன்னதாகச் செய்யப்படுகிறதோ, அவ்வளவு துல்லியமாகக் குழந்தையின் அளவைக் கூற முடியும். குழந்தையின் பிரசவ தேதியைக் கணக்கிடுவதில் கர்ப்பகால ஸ்கேன் சிஆர்எல் பங்கு வகிக்கிறது.

கிரவுன்-ரம்ப் நீளம் (Crown rump length) குறைவாக இருப்பது எட்வர்ட்ஸ் சிண்ட்ரோம் என்றும் அழைக்கப்படும் டிரிசோமி 18 போன்ற குரோமோசோம் முரண்பாடுகளைக் குறிக்கிறது. இந்தச் சிக்கல்களில் பெரும்பாலானவை குழந்தையின் வளர்ச்சியுடன் தொடர்புடையவை. மேலும் சில சமயங்களில் குழந்தை பிறப்புத் தேதியை நிர்ணயிக்க கர்ப்ப காலத்தில் செய்யப்படும் சிஆர்எல் டேட்டிங் ஸ்கேன்களின் நீளம் குறையக்கூடும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் அனாமலி ஸ்கேன் என்றால் என்ன?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement