Dhanteras Meaning in Tamil
நாம் அனைவருமே ஆங்கிலத்தில் பேசி வந்தாலும் கூட ஒரு சில ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தங்களையும் தெரிந்து வைத்திருப்பதில்லை. நாம் அறியாத சில வார்த்தைகளை யாராவது நம்மிடம் முதலில் கூறும்போதுதான் அதற்கான தமிழ் அர்த்தங்களை தெரிந்து கொள்ள விரும்புவோம். அதுமட்டுமில்லாமல் அப்பொழுதான் நமக்கு கற்றுக்கொள்ளும் ஆர்வமும் அதிகரிக்கும். எனவே, நீங்கள் சமீபத்தில் Dhanteras என்ற வார்த்தையை அதிகமாக கேட்டிருந்தால் அதற்கான தமிழ் அர்த்தத்தை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
What is Dhanteras in Tamil:
தந்தேராஸ் என்பது தீபாவளியின் முதல் ஆரம்ப பண்டிகை ஆகும். அதாவது, வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகை 5 நாட்கள் கொண்டப்படும். இந்த பண்டிகையின் முதல் தொடக்க நாளையே தந்தேராஸ் என்று கூறுவார்கள். இன்னும் தெளிவாக சில போனால் தந்தேராஸ், ஒளி பண்டிகையான தீபாவளியின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
தந்தேராஸ் பண்டிகை தனத்ரயோதாஷி என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் இந்துக்கள் தன்வந்தரி கடவுளை வணங்குவார்கள். மேலும், முக்கியமாக இந்த நாளில் வீட்டில் செல்வ செழிப்பு உண்டாக குபேரா பகவான், தன்வந்தரி, எமராஜ், லட்சுமி தேவி ஆகிய கடவுளை வழிபடுவார்கள்.
தந்தேராஸ் தினத்தன்று, வீட்டில் புதிய பாத்திரங்கள், தங்க நகைகள் போன்றவை வாங்கி வைப்பதன் மூலம் வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாகும் என்பது ஐதீகம். இதன் காரணமாக தான் இந்நன்னாளில் நகை வாங்கி வழிபடுகின்றனர்.
இந்த ஆண்டு தந்தேராஸ் பண்டிகை நவம்பர் 10 ஆம் தேதி ஆகும். மேலும், தந்தேராஸ்பூஜை செய்ய உகந்த நேரம் 05:47 PM முதல் 07:43 PM ஆகும். அதாவது, 2 மணிநேரம் 24 நிமிடங்கள் ஆகும்.
Mr, Ms மற்றும் Mrs என்ற வார்த்தைக்கான விரிவாக்கம் மற்றும் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |