தீர்க்க சுமங்கலி பவ | Deerga Sumangali Bhava Meaning in Tamil
திருமணம் ஆன தம்பதிகள் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் போது பதினாறும் பெற்று திருவாழ்வு வாழ வேண்டும் என்று வாழ்த்துவார்கள். இதற்கான அர்த்தம் என்று நாம் நினைத்து கொண்டிருப்பது 16 பிள்ளைகள் மற்றும் செல்வங்கள் பெற்று வாழ என்று நினைத்து கொண்டிருக்கோம். இதற்கான உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்ள இந்த லிங்க கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று வாழ்த்தும் பழமொழிக்கான அர்த்தம் தெரியுமா..? இன்னும் சில நபர்கள் தீர்க்க சுமங்கலி பவ என்று வாழ்த்துவார்கள். இதற்கான உண்மையான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
தீர்க்க சுமங்கலி பவ என்று சொல்வதற்கான அர்த்தம்:
தீர்க்க சுமங்கலி பவ என்று வாழ்த்துவதற்கு கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்பதே அர்த்தம். அது என்ன 5 மாங்கல்யம் என்று நினைக்கிறீர்களா.! அவை என்ன என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
திருமணத்தில் ஒன்று 60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று 70 வயது பீமரத சாந்தியில் ஒன்று 80 வயது சதாபிஷேகத்தில் ஒன்று 96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்றுஇதை பற்றிய அர்த்தத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை. மிகுந்த புன்னியம் செய்தவருக்கே இந்த பாக்கியம் கிடைக்கிறது.
பூமியானது 360 பாகைகளாகவும், 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
சூரியனுக்கு 1 ஆண்டும், செவ்வாய்க்கு 1.5 ஆண்டும், சந்திரனுக்கு 1 மாதமும், புதனுக்கு 1 வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு 1 வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும் ராகுவுக்கு 1.5 வருடங்களும், கேதுவுக்கு 1.5 வருடங்களும், ஆகின்றன.
இந்த சுழற்சியின் அடிப்படையில் 60 வருடங்கள் முடிந்த ஒரு வருடத்திற்கு பிறகு அடுத்த நாள் அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும், வருடம், போன்றவை மாறாமல் இருக்கும்.
மிகவும் புனித தினமான அன்று சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் கடவுளின் முன்னிலையில் நிகழ வேண்டும். ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும் பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை சொல்லி ஹோமங்கள் நடைபெறும்.
இந்த வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தியினால் புனிதம் அடைகிறது. பிறகு அந்த கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.
ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்ற பழமொழிக்கான உண்மையான அர்த்தம் உங்களுக்கு தெரியுமா..?
அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?
தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்து தான் தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே எல்லோரும் ஒன்று என்ற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும். தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
இப்படி அனைத்திலும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போது தான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.
இறையோடு இரண்டறக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.
இது போன்ற அர்த்தம் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும் | அர்த்தம் |