வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தீபாவளி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா.?

Updated On: October 7, 2025 5:40 PM
Follow Us:
Diwali Meaning in Tamil
---Advertisement---
Advertisement

தீபாவளி அர்த்தம் | Diwali Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தீபாவளி என்றால் என்ன அர்த்தம் (Diwali Meaning in Tamil) என்பதை பின்வருமாறு கொடுத்துள்ளோம். இந்துக்கள் பண்டிகைகளில் அனைவராலும் விரும்பப்படுவது தீபாவளி பண்டிகை ஆகும். அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல், அனைவரும் புதிய ஆடை அணிந்து, பாட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தீபாவளி வந்தால் கொண்டாட்டமாக இருக்கும்.

இப்படி நம் அனைவரின் சந்தோசத்திற்கு கொண்டாட்டத்திற்கும் காரணமாக இருக்கும், தீபாவளி என்பதன் அர்த்தம் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா.? தீபாவளி அர்த்தம் பற்றி நாம் அனைவருமே அறிந்துகொள்ள வேண்டும். ஆகையால், இப்பதிவில் பின்வருமாறு தீபாவளியின் அர்த்தம் பற்றி விவரித்துள்ளோம். நீங்கள் படித்து தெரிந்துகொண்டு உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

தீபாவளி முதல் நாள் ஏற்ற வேண்டிய எம தீபம்.! தேதி மற்றும் நேரம்.!

தீபாவளி அர்த்தம்:

 தீபாவளி = தீபம் + ஆவளி ‘தீபம்‘ என்றால் ஒளி, விளக்கு என்றும் பொருள்படும். ஆவளி என்றால் வரிசை என்று பொருள்படும். வரிசையாய் விளக்கேற்றி, நம் வாழ்க்கையில் இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.  

ஒவ்வொருவருடைய மனதிலும், அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற ஏதேனும் ஒரு இருட்டு இருக்கத்தான் செய்கிறது. இந்த தீய குணங்களை நம் மனத்தில் இருந்து எரித்து விட்டு, நல்லதையே நினைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

தீபாவளி ஆனது, தீப ஒளித் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. நம் மன இருள் அகல, இறை அருள் கிடைக்கக் கொண்டாடும் திருநாள் தான் தீபாவளி பண்டிகை.

தீபாவளி என்பது பகவான் கிருஷ்ணன் நரகாசுரனனை வதம் செய்த நாளாக கருதப்படுவதால் அன்றைய நாளை தீபங்களின்  தினமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை பொதுவாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வருகிறது. தீபாவளி என்பது அறியாமைக்கு எதிரான அறிவு மற்றும் தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியாக கருதப்படுகிறது.

பல பண்டிகைகள் வருடம் முழுவதும் வந்தாலும் தீபாவளி என்றாலே தனிச்சிறப்பு உண்டு. தீபாவ்ளி அன்று ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் வைத்து நீராடி, புதிய ஆடை அணிந்து, வீட்டில் தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவது தான் தீபாவளியின் பெருமை.

 இந்து புராணங்களின்படி, தீபாவளி கொண்டாடுவதற்கு பல வரலாற்று சம்பவங்கள் காரணமாக உள்ளது. இராமாயண இதிகாசத்தில் இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பியர். அந்நாளில் அயோத்தியில் உள்ள மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதன் நிகழ்வாக வருடந்தோறும் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி தீபாவளி தினத்திற்கு பல வரலாற்று கதைகள் காரணமாக உள்ளது.  

தீபாவளி அன்று எண்ணெய் குளியலில் சேர்க்க வேண்டிய பொருட்கள்.!

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now