Dormant Tamil Meaning
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Dormant என்பதன் தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க. நாம் அனைவருமே Dormant என்ற வார்த்தையை வங்கி உள்ளிட்ட பல இடங்களில் கேட்டு இருப்போம். ஆனால், அதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Dormant Meaning in Tamil பற்றி விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்துகொள்ளலாம்.
Dormant என்ற வார்த்தை பல்வேறு இடங்களில் சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தப்படும் ஒரு ஆங்கில வார்த்தை ஆகும். அப்படி எல்லா இடங்களில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தை நாம் அனைவருமே அறிந்திருக்க வேண்டும். ஓகே வாருங்கள் Bank Dormant Meaning in Tamil பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
Dormant Meaning in Tamil:
Dormant என்ற ஆங்கில வார்த்தைக்கு தமிழில் “செயலற்ற” (செயலில் இல்லாமல்) என்பது அர்த்தமாக இருக்கிறது. அதாவது, செயலற்று இருக்கும் அனைத்தையும் Dormant என்ற வார்த்தையை பயன்படுத்தி கூறுவார்கள். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் ஏதோ ஒன்று (அது செயலாக இருக்கலாம், திட்டமாக இருக்கலாம், உயிரினமாக இருக்கலாம்) தற்காலிகமாக நிறுத்தப்பட்டு (செயலில் இல்லாமல் இருப்பது) Dormant ஆகும். ஒரு வரியில் சொல்லப்போனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செயலற்று (Inactive) இருப்பது Dormant என்று கருத்தில் கொள்ளலாம்.
Bank Dormant Meaning in Tamil:
நாம் அனைவருமே பேங்கில் Bank Account Dormant ஆகி விட்டது என்று கூறி கேட்டு இருப்போம். அப்படி என்றால் Bank Account ஆனது நீண்ட காலத்திற்கு வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்படாமல் செயல்பாடு இல்லாத வங்கிக் கணக்கு என்பதாகும். இது குறிப்பிட்ட காலத்திற்கு செயலற்று இருக்க்கக்கூடியது. அதனை மீண்டும் Active செய்து செய்து கொள்ள வேண்டும்.
மேலே கூறியது போல் Dormant என்ற வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, இந்த பருவத்தில் துருவ கரடி செயலற்ற நிலையில் உள்ளது (Polar bear is dormant in this season) என்று அறியலாம்.
தொடர்புடைய பதிவுகள் |
Haldi Function என்றால் தமிழில் என்ன தெரியுமா.? |
Chapri என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..! |
DM என்பதற்கான அர்த்தம் |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |