EDD என்றால் என்ன? | EDD Meaning in Tamil

Advertisement

EDD என்பதன் அர்த்தம் என்ன?

நண்பர்களுக்கு வணக்கம்.. நமது பொதுநலம்.காம் வலைத்தளத்தில் பலவகையான வார்த்தைகளுக்கு மற்றும் சுருக்கமான எழுத்துக்களுக்கு அர்த்தம் என்ன என்று தினம்தோறும் தெரிந்துகொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று நாம் தெரிந்துகொள்ள இருப்பது என்னவென்றால், EDD என்றால் என்ன என்பது பற்றியது தான். சரி வாங்க EDD என்றால் என்ன என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.

EDD Meaning in Tamil:

EDD என்பது வேறு ஒன்றும் இல்லை, கர்ப்பம் ஆன பெண்கள் தங்களுடைய முதல் ஸ்கேன் ரிப்போட்டில் கொடுக்கப்பட்டிருக்கும். இதனுடைய முழு விரிவாக்கம் Estimated Date Of Delivery. அதாவது குழந்தை எந்த தேதியில் பிறகும் என்பதை ஸ்கேன் மூலம் தோராயமாக கணக்கிட்டு சொல்லப்பட்டிருக்கும் தேதி ஆகும்.

இந்த EDD தேதியானது ஒவ்வொரு ஸ்கேன் எடுக்கும் போது மாறுபடும், இருப்பினும் குழந்தை பிறகும் தேதியை பெரும்பாலும் மருத்துவர்கள் முதல் ஸ்கேன் ரிப்போட்டில் என்ன EDD தேதி இருக்கிறதோ அதனை தான் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.

இந்த பிரசவ தேதி (EDD) எப்படி கணக்கிடப்படுகிறது என்றால், Last Menstrual Period – LMP அதாவது கர்பமாவதற்கு முன்பு நீங்கள் இறுதியாக எப்பொழுது மாதவிடாய் குளித்தீர்களோ அதனுடைய முதல் நாளில் இருந்து 40 வாரங்களை கணக்கிட்டோம் என்றால், ஒரு பெண்ணின் பிரசவ தேதியான EDD தேதியை மிக எளிதாக கணக்கிடலாம், இப்படி தான் பிரசவ தேதியை கணக்கிடுகின்றன.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் அனாமலி ஸ்கேன் என்றால் என்ன?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement