Eid Mubarak என்பதன் தமிழ் அர்த்தம்..!

Advertisement

Eid Mubarak Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Eid Mubarak என்பதற்காக தமிழ் அர்த்தத்தை பதிவிட்டுள்ளோம். Eid Mubarak என்ற வார்த்தையை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். முஸ்லீம்கள் இந்த வார்த்தையை அதிகம் பயன்படுத்தி கேட்டு இருப்போம். ஆனால், அதற்கான அர்த்தம் என்ன என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் உங்களுக்கு பயனுள்ள வகையில், Eid Mubarak Meaning in Tamil விவரித்துள்ளோம்.

நீங்கள் Eid Mubarak என்பதன் தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். Eid Mubarak என்ற வார்த்தை இஸ்லாமியர்களின் வார்த்தையாக இருக்கிறது. அதனை பற்றிய விவரங்களை இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Eid Mubarak என்பதன் தமிழ் அர்த்தம்:

Happy Eid Mubarak Meaning in Tamil

Eid Mubarak என்றால் தமிழ் பெருநாள் வாழ்த்துக்கள் என்று அர்த்தம் ஆகும். இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில், முப்பது நாளும், இறைவனுக்காக பகல் முழுவதும், நோன்பிருந்த அனைவரும், ஷவ்வால் மாதத்தின் முதல்நாளை, ரமலான் பண்டிகையாக‌ கொண்டாடுகிறார்கள். அன்றைய தினத்தில் ஒருவருக்கொருவர் Eid Mubarak வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள்.

இது முஸ்லீம்களின் பாரம்பரிய அரபு வாழ்த்து ஆகும். ஈத் என்றால் “விருந்து” என்றும் முபாரக் என்றால் “ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்றும் பொருள்ப்படும். தொழுகையை நிறைவேற்றிய பின் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஈத் முபாரக் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள்.

இஸ்லாமியர்களின் புனிதமான நோன்பு மாதமான ரமலான் முடிவடைவதைக் குறிக்கும் ரம்ஜான் பண்டிகையின் போது உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களால் Eid Mubarak கூறப்படுகிறது. இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் Eid Mubarak என்றால் “ஆசீர்வதிக்கப்பட்ட விருந்து அல்லது பண்டிகை” என்று பொருள் கொள்ளலாம். 

Happy Eid Mubarak Meaning in Tamil:

Happy Eid Mubarak என்றால் மகிழ்ச்சியான ஆசீர்வதிக்கப்பட்ட பண்டிகை என்று அர்த்தம் ஆகும்.

Eid Mubarak Wishes Meaning in Tamil:

Eid Mubarak Wishes என்றால் தமிழில் ஆசீர்வதிக்கப்பட்ட பண்டிகை வாழ்த்துக்கள் என்று அர்த்தம் ஆகும்.

தொடர்புடைய பதிவுகள் 
Ramadan Kareem Meaning in Tamil
அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..?
Gudi Padwa என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம்..!
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement