Encumbrance Certificate Tamil Meaning!
நமது பிறப்பு முதல் இறப்பு வரை பதிவுசெய்து வைத்துக்கொள்ள சான்றிதழ் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சில பேருக்கு இதெற்கெல்லாம் சான்றிதழ்கள் வாங்க வேண்டுமா என்று தெரியாமலே அவர்களது வாழ்க்கையை ஓட்டுகின்றனர். சான்றிதழின் வகையைப் பொறுத்து, பல்வேறு காரணங்களுக்காக சான்றிதழ்கள் தேவைப்படும்.
இந்தப்பதிவில் Encumbrance Certificate என்றால் என்ன? என்பதை பற்றி நன்றாக தெரிந்துகொள்வோம்.
ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..?
Encumbrance Certificate என்றால் என்ன?
Encumbrance Certificate என்றால் வில்லங்க சான்றிதழ் என்று பொருட்படும். ஒரு சொத்தின் சுத்தமான உரிமைச் சான்றிதழானது என்கம்பரன்ஸ் சான்றிதழ் (Encumbrance Certificate-EC) என அழைக்கப்படுகிறது. இது ஒரு ரிப்போர்ட் கார்டு போன்ற ஒரு சொத்தின் நிதி மற்றும் சட்ட நிலை பற்றிய தகவலை வழங்குகிறது.
வீடுகள் மற்றும் நிலம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் வாங்குபவர்களுக்கு, முந்தைய உரிமையாளர்களைப் பற்றி மேலும் அறியவும், தளத்தில் ஏதேனும் வில்லங்கம் உள்ளனவா என்பதை அறியவும் Encumbrance Certificate-EC வாங்குவது பொதுவான நடைமுறையாகும்.
சொத்தின் முழு உரிமை அல்லது விற்பனையைத் தடுக்கும் சொத்து தொடர்பான எந்தவொரு கடமை அல்லது உரிமைகோரல் இங்கே குறிப்பிடப்படுகிறது.
Encumbrance Certificate-ல் உள்ள தகவல்கள்
- சொத்து விவரங்கள் (முகவரி, எல்லைகள், சர்வே எண் போன்றவை)
- சொத்து வகை (குடியிருப்பு, வணிகம், விவசாயம் போன்றவை)
- தற்போதைய உரிமையாளரின் பெயர்(கள்)
- சொத்து சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளின் வரலாறு (விற்பனை, அடமானம், பரிசு போன்றவை).
Encumbrance Certificate-ன் முக்கியத்துவம்
- நேர்மையற்ற பரிவர்த்தனைகள் மற்றும் பிரச்சனைக்குரிய சட்ட விஷயங்களுக்கு எதிரான பாதுகாப்பு.
- சொத்து தொடர்பான முடிவுகள் அறிவுடன் எடுக்கப்படுவதை உறுதி செய்கிறது.
- சொத்து உரிமைகள் மற்றும் பண நலன்களைப் பாதுகாக்கிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |