Fawn என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா.?

Advertisement

Fawn Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Fawn என்பதற்கான தமிழ் அர்த்தம் பற்றித்தான் தெரிந்துகொள்ள போகிறோம். ஆங்கில வார்த்தைகள் நிறைய உள்ளது. ஆனால், ஒரு சில ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தம் மட்டுமே நமக்கு தெரியும். பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், நமக்கு தெரியாத ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவோம். அந்த வகையில் நீங்கள் Fawn என்பதன் தமிழ் அர்த்தம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Fawn என்றால், ஒரு விலங்கினை குறிக்கும் ஆங்கில சொல் ஆகும். அதாவது, ஒரு விலங்கின் குட்டியை குறிக்கும் ஆங்கில சொல் ஆகும். அதனை பற்றி விவரமாக பின்வருமாறு படித்து தெரிந்துகொள்ளலாம் வாங்க.

Fawn Meaning in Tamil With Example:

Fawn என்றால் மான் குட்டி ஆகும். மான் குட்டியை தான் ஆங்கிலத்தில் Fawn என்று குறிப்பிடுவார்கள். மேலும், Fawn என்பதை நிறத்திலும் குறிப்பிடுவார்கள். நிறத்தில் Fawn என்பது, வெளிர்பழுப்பு, இளஞ்சிவப்பு ஆகும். எனவே, Fawn என்பது, மானின் இளம் குட்டியை குறிப்பிடும் ஆங்கில வார்த்தை ஆகும்.

Fawn Meaning in Tamil With Example

Fawn Colour Meaning in Tamil:

Fawn Colour என்றால் தமிழில் மான் நிறம் என்பதாகும்.

Fawn எடுத்துக்காட்டு வாக்கியம்:

The Fawn Followed its Mother – குட்டி மான் தன் தாயைப் பின்தொடர்ந்தது.

A Fawn was spotted in the Forest – காட்டில் ஒரு குட்டி மான் கண்டுபிடிக்கப்பட்டது.

மான் பற்றி உங்களுக்கு தெரிய சில தகவல்கள்

மான்களும் அதன் ஆங்கில பெயர்களும்:

மான் வகை  ஆங்கில பெயர் 
A Fawn மான் கன்று
A Buck ஆண் மான்
A Doe பெண் மான்
A Roebuck கலைமான்
A Roe பெண் கலைமான்

மான் குட்டி பற்றிய சில வரிகள்:

Fawn tamil Meaning

  • மான் பாலூட்டி வகையை சார்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும்.
  • மான் குட்டியை தன் தாய் மானே வளர்கிறது.
  • மானின் சினைக்காலம் பத்து மாதங்கள் ஆகும்.
  • மான்கள் ஆகஸ்ட் மாதம் முதல் வரையில் இணை சேர்கின்றன.
  • மான் ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை ஈனும். மூன்று குட்டிகளை ஈனுவது அரிது.
  • மான் குட்டி ஆனது, பிறந்த 20 நிமிடத்திலேயே எழுந்து நிற்கும். பிறந்து ஒருவாரம் வரை புற்களுக்குள்ளே மறைந்து வாழும்.
  • அதன் பிறகு, தாயுடன் செல்லும். ஒரு ஆண்டு வரை தாயுடன் வாழும். அதன் பிறகு, ஆண் குட்டிகள் தான் தாயை சந்திக்க வருவதில்லை. ஆனால், பெண் மான் குட்டிகள் வளர்ந்தும் அதன் தாயை சந்திக்க வரும்.
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

Advertisement