வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஏன் இந்த ஆண்டு பிறக்கும் குழந்தைகளை Gen Beta என்று சொல்கிறார்கள்..!

Updated On: January 10, 2025 3:52 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Gen Beta Meaning In Tamil

வாசிப்பாளர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் Gen Beta என்றால் என்ன மற்றும் அதன் அர்த்தத்தை பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து பிறக்கும் குழந்தைகளை Gen Beta என்று அழைக்கிறோம். ஒவ்வொரு ஜெனெரேஷன் குழந்தைகளையும் ஒவ்வொரு பெயர் உடன் அழைக்கிறோம். மக்கள் தொகை நிபுணர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு ஜெனெரேஷன் குழந்தைகளும் ஒவ்வொரு மாதிரியான தொழில்நுட்பத்தை பார்த்து வளர்ந்து வருகிறார்கள். இனிமேல் வர இருக்கும் ஜெனெரேஷன்கள் முழுவதுமாக டிஜிட்டல் தொழில்நுட்ப்பத்தை தான் பார்த்து வளர்வார்கள் என்று ஆய்வு கூறுகிறது. ஏனெனில் 2000 ஆண்டுகளில் எல்லாம் தொலைபேசிகள் பேசுவதற்கு மட்டுமே பயன்பாடு வந்தது. ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவு வரை இந்த தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு கட்டுரை..! | Artificial Intelligence Katturai In Tamil..!

Gen Beta:

தலைமுறை இடைவெளிகளை குறிக்கும் இந்த குறிச்சொல், குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது மாற்றம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. Gen Beta காலம் துவங்குவதற்கு முன்பு Gen Z காலம் 1995 முதல் 2009 வரை இருந்தது. அதன் பிறகு Gen Alpha காலம் 2010 முதல் 2024 வரை இருந்தது. தற்போது Gen Beta  காலம் 2025 துவங்கியுள்ளது. இது 2039 வரை இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

ஆய்வாளர்கள் கூற்றுப்படி, இந்த கால இடைவெளியில் பிறக்கும் குழந்தைகள் உலக மக்கள் தொகையில் 13% – 16% வரை இருப்பர் என நம்பப்படுகிறது.

Gen Beta பெயர் காரணம்:

ஜெனரல் பீட்டா என்ற பெயர் கிரேக்க எழுத்துக்களில் இருந்து எடுக்கப்பட்டது. இது ஃபியூச்சரிஸ்ட் மார்க் மெக்ரிண்டால் ( Futurist Mark McCrindle) என்பவரால் உருவாக்கப்பட்டது. Gen Z தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் மிகவும் திறமையானவர் மற்றும் பாரம்பரிய முறைகளை விட டிஜிட்டல் தகவல்தொடர்புகளை பெரும்பாலும் விரும்புகிறார்.

இந்த கால இடைவெளியில் பிறகும் குழந்தைகள் முழுவதுமாக டிஜிட்டல் உலகில் வாழும், மேலும் செயர்கை நுண்ணறிவு (AI) யுகத்தில் வாழ்வர் எனவும் ஆய்வு கூறப்படுகிறது. இந்த Gen Beta குழந்தைகள் தங்கள் சுய அறிவை பயன்படுத்தாமல் முழுவதுமாக செயற்கை நுண்ணறிவை பின்பற்றியே இருப்பார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

Gen Beta குறைபாடுகள்:

ஆய்வாளர்கள் கூற்றுப்படி இந்த Gen Beta குழந்தைகளிடையே படைப்பாற்றல் மற்றும் தனிப்பட்ட திறமைகள் குறைவாகவே இருக்கும் என்று கூறுகிறார்கள். மேலும் சுயமாக சிந்திக்கும் நேரத்தை காட்டிலும் டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவின்  துணையை நாடியே வாழ்க்கையை கழிப்பார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

Sawadee Ka என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா.?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now