Haldi Meaning in Tamil Name
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் Haldi Function என்றால் என்ன என்பதை இப்பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க. நாம் அனைவருமே Haldi Function என்பதை பிறர் கூற அறிந்து இருப்போம். ஆனால், அப்படி என்றால் என்ன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவில் Haldi Function Meaning in Tamil பற்றி இப்பதிவில் விவரித்துள்ளோம். வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.
Haldi Function தற்போது பிரபலம் அடைந்து வருகிறது. இம்முறை பழங்காலத்தில் இருந்து செய்து வந்தாலும் தற்போது Haldi என்ற பெயரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தெரியாதவங்க வீட்டு Function Attend பண்ண இத மட்டும் Follow பண்ணுங்க
Haldi Ceremony Meaning in Tamil:
திருமணத்திற்கு முதல் நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பாக மணமகள் மற்றும் மணமகனுக்கு நடக்கும் சடங்கு Haldi Ceremony ஆகும். அதாவது, திருமணத்திற்கு முன்பாக மணமகன் மற்றும் மணமகளுக்கு மஞ்சள் தேய்ச்சு நலங்கு வைக்கும் விழா ஆகும். இந்த விழா ஆனது, மணமகனுக்கு மணமகன் வீட்டிலும் மணமகளுக்கு மணமகள் வீட்டிற்கும் தனித்தனியே நடைபெறும்.
வட இந்திய மாநிலங்களில் திருமணத்துக்கு முந்தைய நாள் இந்த Haldi சடங்கு பிரபலமாக செய்வார்கள். அதுவே, தென் இந்தியாவில் Haldi Function ஆனது, நலங்கு என்கிற பெயரில் பிரபலமாக நடைபெறும். இந்த விழாவில் உறவினர்கள் அனைவரும் சேர்ந்து கல்யாணம் ஆக போகும் பெண்/ஆணுக்கு மஞ்சளால் நலங்கு வைத்து வாழ்த்துவார்கள்.
Haldi விழாவானது திருமணத்தைப் போலவே புதிய ஆடைகள், நகைகள் போன்ற பொருட்களை மஞ்சள் நிறத்திலேயே அணிந்து மங்களகரமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்த சடங்கு வெவ்வெறு விதங்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, சில ஓரர்களில் திருமணத்திற்கு முதல் நாள் இந்த சடங்கு நடத்தப்படுகிறது. சில ஊர்களில் திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக இந்த சடங்கு நடத்தப்படுகிறது.
“பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று வாழ்த்தும் பழமொழிக்கான அர்த்தம் தெரியுமா..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |