Hawala Money Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல பயனுள்ள தகவல்களை அறிந்து வருகிறோம். அதேபோல், இன்றைய பதிவில் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவலை பற்றி பார்க்கலாம். அதாவது, நாம் அனைவரும் அதிகமாக இடங்களில் கேட்டிருக்கும் Hawala Money என்றால் என்ன.? இது எப்படி செய்லபடுகிறது.? உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
ஹவாலா (Hawala) என்றால் என்ன.?
ஹவாலா என்பது ஒரு அரபி சொல் ஆகும். இதற்கு தமிழில் பரிமாற்றம் என்ற அர்த்தமும் உள்ளது. அதாவது, ஹவாலா என்றால் பரிமாற்றம் என்பது அர்த்தம் ஆகும். மத்திய கிழக்கு, வடக்கு ஆப்பிரிக்கா, இந்தியா துணைக் கண்டனம் ஆகிய நாடுகளில் பெருமளவு பணத்தை பணப் பரிவர்த்தனை தரகர்கள் மூலமாக பரிமாற்றம் செய்யும் முறையாகும்.
Hawala என்பது நம்பிக்கையின் அடிப்படையில், சட்ட விதிகளுக்கு உட்படாமல் நடைபெறும் பண பரிவர்த்தை முறை ஆகும். இம்முறை தேர்தல் காலத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த பரிவர்த்தனையானது வழக்கமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இணையான ஒரு கட்டமைப்பாக செயல்படுகிறது.
உதாரணமாக, வெளிநாடுகளில் இருந்தது அதிக அளவு பணத்தை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல இயலாத போதும் அல்லது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதிகளவு பணத்தை எடுத்து செல்ல இயலாத போதும் இம்முறை (ஹவாலா) பயன்படுகிறது.
குறிப்பாக வளைகுடா நாடுகளில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்களது வீடுகளுக்கு பணம் அனுப்புவதற்கு இந்த ஹவாலா முறையைத்தான் பயன்படுத்தினார்கள்.
Constructive Criticism என்பதற்கான தமிழ் அர்த்தம்.
ஹவாலா பணம் எப்படி செயல்படுகிறது.?
உதாரணமாக, அமெரிக்காவில் உள்ள ஒருவர் இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்திற்கு அதிகளவு பணம் அனுப்புவதற்கு, வங்கியை நாடாமல் அமெரிக்காவில் உள்ள ஹவாலா முகவரை அணுகி, எந்த இடத்திற்கு, எவ்வளவு பணம், யாருக்கு அனுப்ப வேண்டும் போன்ற விவரங்களை அவரிடம் கூறுவார். இதற்கு ஒரு பாஸ்வோர்டும் வழங்கப்படும். அதன் பிறகு பண பரிமாற்றம் வேலைகள் தொடங்கி இந்தியாவில் உள்ள ஹவாலாரிடம் கூறுவார்.
அதன் பிறகு, அந்நபர் அந்த கடவு சொல்லை இந்தியாவில் உள்ள உறவினரிடம் தெரிவித்து இந்த இடத்திற்கு சென்று இந்த பாஸ்வோர்டை சொல்லி அந்த நபரிடம் பணத்தை பெற்று கொள்ளுங்கள் என்று கூறுவார்.
கடவு சொல்லை கூறியதும், அமெரிக்காவில் கொடுக்கப்பட்ட தொகைக்கு இணையான தொகை உறவினர் கையில் கொடுக்கப்படும்.
ஹவாலாவாலாக்களுக்கு கைமாறும் தொகையில் 2% கமிஷன் கிடைக்கும்.
இதுவே ஹவாலா பணம் பரிமாற்றம் ஆகும்.
ஹவாலா நன்மைகள்:
இம்முறையில் பணம் அனுப்ப வங்கியை விட குறைவான செலவே ஆகும்.
வங்கிகளை விட வேகமாகப் பணம் பரிமாற்றம் செய்யப்படும்.
சில சமயங்களில் வீட்டிற்கே பணம் வந்து கொடுக்கபப்டும்.
Deliberate என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |