Hydroureteronephrosis Meaning in Tamil
நமக்கு உடல்நல சரியில்லை என்றால் அதனை சரி செய்வதற்கு மருத்துவரை நாடி செல்கின்றோம். மருத்துவர் நமக்கு புரியும் படி சில வார்த்தைகளில் நம்மிடம் பேசுவார்கள். ஆனால் மற்ற மருத்துவர்களுடன் பேசும் போது அவர்களின் பாஷையில் பேசுவார்கள். நமக்கு அதை பற்றி தெரியாது. நாம் அறிவு திறனை வளர்க்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்கான முயற்சிகளையும் எடுக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Hydroureteronephrosis என்பதற்கான அர்த்தம் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
Hydroureteronephrosis Meaning in Tamil:
Hydroureteronephrosis என்பது சிறுநீரகத்தில் ஏற்படும் வீக்கம் அல்லது சிறுநீரக தளர்ச்சி, சிறுநீர் அடைப்பு போன்றவை அர்த்தமாக இருக்கிறது.
ஹைட்ரோனெபிரோசிஸ் ஏற்படுவதற்கான காரணம்:
கழிவுப்பொருட்களை வெளியேற்றுவதற்கு சிறுநீரகங்கள் காரணமாக இருக்கின்றன. அவை நமது உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. ஏதேனும் அடைப்பு அல்லது இதுபோன்ற பிற பிரச்சனைகள் நிரந்தர சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும், அங்கு சிறுநீரகங்கள் கழிவுப் பொருட்களை வெளியேற்ற முடியாது. இதுபோன்ற நிலையில் சிறுநீரகத்தில் சிறுநீர் சேர்ந்து ஹைட்ரோனெபிரோசிஸ் ஏற்படுகிறது.
சிறுநீர் கழிக்க முடியாமல் இருப்பது அல்லது முழுமையாக சிறுநீர் வெளியேறாமல் இருப்பது இது போன்று தொடர்ந்து ஏற்பட்டால் சிறுநீரகத்தில் வீக்கம் ஏற்படும்.
OCD என்பதற்கான அர்த்தம் என்னெவென்று தெரியுமா.?
சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும் வீக்கத்தை ஏற்படுத்தும்.
ஆண்களுக்கு புரோஸ்டேட் சிறுநீர்பையிலிருந்து சிறுநீர் வெளியேறுவதை தடுக்கிறது. இவை ஹைட்ரோனெபிரோசிஸ் பிரச்சனை ஏற்படுத்துகிறது.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் வளர்ந்து வரும் கருப்பையானது சிறுநீர் பாதையில் அழுத்தத்தை கொடுக்கிறது. இதனாலும் ஹைட்ரோனெபிரோசிஸ் பிரச்சனை ஏற்படுகிறது.
சிறுநீரகம் அல்லது சிறுநீரக பாதையில் ஏதும் கட்டிகள் இருந்தாலும் ஹைட்ரோனெபிரோசிஸ் பிரச்சனை ஏற்படும்.
Stenosis என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |