இதழிகா பெயர் அர்த்தம் | Idhazhika Name Meaning in Tamil
வணக்கம் நண்பர்களே..! உங்களுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்குமா..? இந்த கேள்வி தவறு என்று நினைக்கின்றேன். ஏனென்றால் யாருக்கு தான் குழந்தைகள் பிடிக்காது சொல்லுங்கள். குழந்தைகள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் சந்தோசம் அளவில்லாமல் காணப்படும். நம் மனதில் ஏதாவது கவலைகள் இருந்தாலும், குழந்தைகளின் முகத்தில் இருக்கும் சிரிப்பை பார்த்தாலே அந்த கவலைகள் அனைத்தும் பறந்துவிடும். சரி இப்போது நம் வீட்டில் இருக்கும் அக்காவுக்கு குழந்தை பிறக்கப்போகிறது என்று வைத்து கொள்வோம். உடனே நாம் என்ன செய்வோம். குழந்தை பிறக்கும் முன்பிலிருந்தே அந்த குழந்தை என்ன பெயர் வைக்கலாம் என்று தேடுவோம். அதுவும் கடைகளில் விற்கும் புத்தகங்களை வாங்கி தேடுவோம். ஆனால் இப்போது அப்படி இல்லை அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. அதிலேயே பெயர்களை தேடலாம். சரி வாங்க நண்பர்களே இதழிகா என்ற பெயரின் அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
இதழிகா என்ற பெயரின் அர்த்தம் என்ன..?
இதழிகா என்ற பெயர் உலகில் பலரால் விரும்பப்படும் ஒரு நல்ல பெயர் ஆகும். இந்த பெயருக்கு உலகில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது. அதனால் இந்த பெயரை உங்கள் குழந்தைக்கு வைக்கலாம். இதழிகா என்பது பெண் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர் ஆகும்.
அதுமட்டுமில்லாமல் இந்த பெயர் பார்வதி தேவியின் மற்றொரு பெயர் ஆகும். அதனால் இந்த பெயரை உங்கள் குழந்தைக்கு வைக்கலாம்.
இதழிகா என்ற பெயருக்கு பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, சமநிலை, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளமான மற்றும் நேர்மையானவர் என்று பல அர்த்தங்கள் இருக்கிறது.
ஹர்ஷிகா என்ற பெயரில் இவ்வளவு அர்த்தம் உள்ளதா |
இதழிகா என்ற பெயர் கொண்டவர்களின் குணம்:
இதழிகா என்ற பெயர் கொண்டவர்கள் மற்றவர்களிடம்இயல்பாக பழகும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஆசைகள் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடன் அதிக நேரத்தை செலவு செய்வார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இந்த பெயர் கொண்ட பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவார்கள். இவர்கள் நம்பிக்கையுடனும் நேர்மறையாகவும் இருப்பார்கள். இந்த பெயர் கொண்ட பெண்களிடம் பொறுமை அதிகமாக காணப்படும். மேலும் அனைவருடமும் அன்பாக பழகுவார்கள்.
இந்த பெயர் வடையவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை கழிக்க கூடியவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் முழு நம்பிக்கையுடன் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். இதனால் செய்ய கூடிய செயல்களில் வெற்றியை காண கூடியவர்களாக இருப்பார்கள்.
தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும் என்று நினைக்க கூடியவர்களாக இருப்பார்கள். தங்களின் குடும்பத்தின் மீது அதிக அன்பை வெளிப்படுத்த கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
எண் கணித முறை:
எண் கணித மதிப்பு 6ன் படி, இதழிகா என்ற பெயருக்கு பொறுப்பு, பாதுகாப்பு, வளர்ப்பு, சமநிலை, அனுதாபம், நட்பு, சிறந்த உறவை உருவாக்குபவர், சிறந்த பெற்றோர், தாராளமான மற்றும் நேர்மையானவர் போன்வற்றை குறிக்கிறது.
நித்திஷ் என்ற பெயர் கொண்டவரா.. அப்போ நீங்க இப்படி தான் |
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |