Ikkaraikku Akkarai Pachai Proverb | இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை பொருள்
நம் முன்னோர்கள் வாழ்க்கையை பழமொழி வடிவில் நமக்கு எடுத்துரைத்துள்ளார். அதாவது, வாழ்க்கை நடப்புகள் அனைத்தும் பழமொழி மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம். அப்படி தமிழில் உள்ள ஒவ்வொரு பழமொழிக்கு ஒரு விளக்கம் உள்ளது. எனவே, அந்த வகையில், இப்பதிவில் பழமையான பழமொழிகளில் ஒன்றான இக்கரைக்கு அக்கரை பச்சை பழமொழி விளக்கம் பழமொழி விளக்கம் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க.
இக்கரைக்கு அக்கரைக்கு பச்சை என்ற பழமொழியை நாம் அனைவருமே அறிந்து இருப்போம். புத்தகத்திலும், பலர் கூறியும் இந்த பழமொழியை அறிந்து இருப்போம். ஆனால், அதற்கான தெளிவான விளக்கம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரியாது. ஆகையால், இப்பதிவின் வாயிலாக இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழியின் விளக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
Ikkaraikku Akkarai Pachai Meaning in Tamil:
எப்போதுமே நம் கண்கள் அருகில் இருக்கும் பொருட்களைக் காணத் தவறிவிடும். தூரத்தில் இருக்கும் பொருட்களை தான் பார்க்கும். நாம் இருக்கும் இடத்தில் இருந்து மற்ற இடங்களை காணும்போது அதுதான் அழகானது, சிறந்தது என்று தோன்றும். இன்னும் தெளிவாக, சொல்லப்போனால் நீங்கள் ஒரு பசுமையான அழகான இடத்தில் நின்று கொண்டிருக்கீர்கள். ஆனால், நீங்கள் நிற்கும் இடத்தினை ரசிக்க மாட்டீர்கள், உங்கள் கண்ணிற்கு தூரத்தில் இருக்கும் இடம் தான் பசுமையானதாகவும் அழகாவும் இருக்கிறது என்று எண்ணுவீர்கள். அடுத்து அந்த இடத்திற்கு சென்று நின்று பார்த்தால், நீங்கள் முதலில் நின்ற இடம்தான் பசுமையாக தெரியும். இதனை தான் “இக்கரைக்கு அக்கரை பச்சை” என்று கூறுவார்கள். என்றுமே நம்மிடம் இருப்பது தான் அழகு என்பதை உணர வேண்டும். இந்த பழமொழி நம் வாழ்வில் பல இடங்களில் பயன்படும். மேலும், இந்த பழமொழிக்கு எடுத்துக்காட்டாக பல்வேறு விஷயங்களை கூறலாம்.
ஆனைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும் பழமொழி விளக்கம் தெரியுமா..?
எடுத்துக்காட்டு:
நாம் ஒரு அழகான ஆடை அணிந்திருப்பார்கள். ஆனால், நம்மை விட அடுத்தவர்கள் உடுத்திய ஆடை தான் உங்கள் கண்ணிற்கு அழகாக தெரியும். இதேபோல் தான் அடுத்தவர்களும் அவர்கள் ஆடையை விட உங்கள் ஆடையை அழகாக இருக்கிறது என்று கூறுவார்கள். இவ்வாறு தம்மிடம் இருக்கும் பொருளின் மதிப்பு நமக்கு தெரியாது.
அழகான வீடு கட்டி இருப்போம். ஆனால் அடுத்த வீட்டுக் காரனுடையவீடுதான் அழகாக இருப்பதுபோல் தோன்றும். அதேபோல், நம் வீட்டில் நம் அம்மா எவ்வளவு சுவையாக சமைத்தாலும், அடுத்த வீட்டு சாப்பாடு தான் ருசியாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருப்போம்.
பத்துக்கு மேல் பத்தினி இல்லை என்ற பழமொழியின் அர்த்தம் தெரியுமா?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |