Illuminati Meaning in Tamil
அன்றாட வாழ்வில் நாம் என்னதான் ஒரு சில ஆங்கில வார்த்தைகள் பேசி வந்தாலும் கூட தொடர்ந்து அதிக ஆங்கில சொற்களை பேச வேண்டும் என்ற ஆசை ஆனது இருக்கும். ஏனென்றால் தற்போது பெரும்பாலான இடங்களில் ஆங்கிலம் பேசுவது வழக்கமாக மாறிவிட்டது. அந்த வகையில் அந்த மொழியை பேச, கருத்துகளை பகிர மொழி அவசியமாகிறது. அப்படி பேசும் போது மற்றவர்களுக்கு புரியுமா என்று சிந்தித்தும் பேசுவது நல்லது. ஏனென்றால் அடிப்படையான விஷயங்கள் கூட தெரியாமல் நாம் பேசுவதால் கருத்து சரியாக மாற்ற ஒருவரிடம் சென்றடையாது. அதனால் அதிகம் பயன்படுத்தும் அல்லது சிறிய வார்த்தைகள் பேசினாலும் கூட அதற்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தெரிந்துகொண்டு பேசுவது நல்லது. எனவே இன்று illuminati என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தம் என்ன என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
illuminati Meaning in Tamil:
“இலுமினாட்டி” என்ற சொல் லத்தீன் வார்த்தையான “இல்லுமினாட்டஸ்” என்பதிலிருந்து வந்தது.
இலுமினாட்டி என்பற்கு அறிவொளி, ஞானோதிகள் என்பன தமிழ் அர்த்தங்களாகும். அதாவது அறிவு உள்ளவர்கள் மற்றும் அறிவு பெற்றவர்கள் ஆகும்.
உண்மையான மற்றும் கற்பனையான பல குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட பெயரே இலுமினாட்டி ஆகும்.
அந்த குழு அறிவில் சிறந்தவர்கள் கொண்டதாக நம்பப்படுகிறது.
இந்த இலுமினாட்டி குழு 1776 இல் பவேரியாவில் இங்கோல்ஸ்டாட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஆடம் வெய்ஷாப்ட் என்பவரால் நிறுவப்பட்டது.
இந்த illuminati குழு மதம், அரசியல், மூடநம்பிக்கை மற்றும் அறிவியலில் ஒழுக்க சீர்திருத்தத்தை ஊக்குவிக்கின்றனர்.
அநீதியைத் தூண்டுபவர்களின் சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, அவர்களை ஆதிக்கம் செலுத்தாமல் அவர்களைக் கட்டுப்படுத்துவது இவர்களின் குறிக்கோளாக இருந்துள்ளது.
இல்லுமினாட்டிகள் தங்கள் குழுவினருக்கு ரகசிய சடங்குகள் மூலம் அறிவை பெற உதவி செய்வதாக நம்ப படுகிறது.
1785 ஆம் ஆண்டில் பவேரியாவின் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது.
இல்லுமினாட்டிகள் இப்பொழுது இல்லாவிட்டாலும் அவர்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இல்லுமினாட்டிகள் பற்றிய தொடர்ச்சியான கதைகள் உலகம் முழுவதும் வலம்வருகிறது.
இல்லுமினாட்டிகள் தொடர்பான பல நாவல்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உள்ளன.
இவற்றில் மிகவும் பிரபலமான திரைப்படம் டான் பிரவுனின் ஏஞ்சல்ஸ் மற்றும் டெமான்ஸ் ஆகும். இது டாம் ஹாங்க்ஸ் நடிப்பில் 2009 வெளியானது.
Reluctant என்பதன் தமிழ் அர்த்தம் என்ன ?
Nap என்பதன் தமிழ் அர்த்தம் என்ன தெரியுமா..?
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |