IMPS என்றால் என்ன உங்களுக்கு தெரியுமா..?

IMPS Meaning in Tamil

IMPS Meaning in Tamil..!

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்றைய பதிவில் IMPS என்றால் என்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். IMPS முறை எதற்கு பயன்படுகிறது. IMPS பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இந்த IMPS முறை பெரும்பாலும் வங்கிகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வங்கிகளில் எத்தனையோ இணையதள முறைகள் மூலம் பணம் பரிமாற்றம் செய்வது, பணம் பரிவர்த்தனை செய்வது போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி பயன்பட்டு வரும் முறைகளில் ஓன்று தான் இந்த IMPS முறை. இந்த IMPS முறையை பயன்படுத்தி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும். மேலும், IMPS பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் பாருங்கள் ⇒ IFSC Code என்றால் என்ன?

IMPS என்றால் என்ன..? 

IMPS என்பது ஆங்கிலத்தில் Immediate Payment Service என்று அழைக்கப்படுகிறது. IMPS  இந்த முறையானது இணையதள வங்கி சேவையின் மூலம் பணம் பரிமாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் ஆகும். IMPS என்பது தமிழில் உடனடி கொடுப்பனவு சேவை என்று அழைக்கப்படுகிறது.

மக்கள் இதுபோன்ற முறைகளை பயன்படுத்தி பணப் பரிமாற்றம் மூலமாக தங்களின் பணத்தை பரிமாறி கொள்கிறார்கள். அனைத்து வங்கிகளிலும் நிதி பரிமாற்றத்தை எளிதான முறையில் செயல்படுத்த இதுபோன்ற முறைகளை பயன்படுத்துகின்றன. இந்த முறைகளை பயன்படுத்தி நீங்கள் உங்கள் பண பரிமாற்றத்தை விரைவில் அனுப்ப முடியும்.

இந்த முறை சாதாரண மக்களால் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த IMPS முறையை பயன்படுத்தி ஸ்மார்ட் போன்கள் மூலம் பணம் பரிவர்த்தனைகள் செய்ய முடியும். இந்த முறையை பயன்படுத்தி உங்கள் மொபைல் மூலம் பணத்தை விரைவாக அனுப்ப முடியும். 

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ NEFT என்றால் என்ன..?

இந்த IMPS முறையை பயன்படுத்தி எந்த நாட்களிலும் எந்த நேரத்திலும் வேண்டுமானாலும் 24 மணி நேரமும் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும். விடுமுறை நாட்களிலும் இந்த சேவை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்த IMPS முறையில் எவ்வளவு குறைந்தபட்ச தொகையாக இருந்தாலும் அதை பரிவர்த்தனை செய்ய முடியும். இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் எவ்வளவு சிறிய தொகையை வேண்டுமானாலும் அனுப்பலாம். எடுத்துக்காட்டாக.., இந்த IMPS  முறையை பயன்படுத்தி 1 ரூபாய் பணத்தை கூட இதன் மூலம் விரைவாக அனுப்ப முடியும்.     

சில வங்கிகளில் இந்த முறையை பயன்படுத்தி பயனாளருக்கு SMS அடிப்படையில் சேவைகளை வழங்குகிறது. வங்கிகளில் மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் போன்றவற்றின் மூலம் செய்யப்படும் உடனடி பணப் பரிமாற்றம் அனைத்தும் இந்த IMPS முறையில் தான் நடைபெறுகிறது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com