IPO என்றால் என்ன? | What is IPO in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் IPO என்பதற்கான விளக்கத்தை தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது உள்ள மக்கள் பெரும்பாலும் பணத்தை சேகரிப்பதற்கு பல வழிகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். வருமானம் ஈட்டுவதற்கான வழிகளில் மக்கள் இப்பொழுது பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வருகின்றனர். முதலீடு தொடங்குவதற்கு முன்னர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் இன்னும் உள்ளன. அந்த வகையில் இந்த தொகுப்பில் IPO பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
IPO Full Form in Tamil:
IPO என்பதற்கான விரிவாக்கம் Initial Public Offering (ஆரம்ப பொது வழங்கல்) ஆகும்.
ஐபிஓ என்றால் என்ன?
- ஒரு தனியார் நிறுவனம் பங்கு சந்தை மூலம், தனது பங்குகளை விற்று அதன் மூலம் நிதியை திரட்டும் ஒரு அமைப்பே ஆகும். சிறிய, இளம் நிறுவனங்கள் தமது நிறுவனத்தை விரிவாக்கும் பொருட்டு அதற்கான முதலீட்டை ஈட்டுவதற்கும், பெருக்குவதற்கும் ஏற்பாடு செய்யும் முறையாகும்.
- புதிதாக பங்குகளை வெளியிடும் நிறுவனங்கள், அவர்களுக்கென ஒரு முதலீட்டு வங்கியை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வங்கி அவர்களின் நிறுவனத்தை பற்றிய தகவல்கள் மற்றும் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யலாம் போன்றவற்றை சேகரிப்பார்கள்.
IPO Meaning in Tamil:
- பின் அந்த நிறுவனமும், வங்கியும் ஒன்று சேர்ந்து நிதி பற்றிய விவரங்களை பட்டியலிட்டு பங்குச்சந்தை வழிகாட்டு ஆணையமான செபியிடம் தாக்கல் செய்வார்கள். பிறகு இந்த நிறுவனம் பங்கு சந்தையில் நிதியை சேகரிப்பதற்கு உகந்த நிறுவனமா என்பதை பங்குச்சந்தை ஆணையம் முடிவு செய்யும்.
- பங்குச்சந்தை ஆணையம் முடிவு செய்த பிறகு பங்குகளை பெறுவதற்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதற்கான ஒரு தேதியை செபி வழங்கும். புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கு விரைவில் வரவேற்பு கிடைக்காது.
- குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பங்கு கிடைப்பதற்கு நீங்கள் முதலீட்டாளர்களை கண்டுபிடிக்க வேண்டும் அல்லது உங்களது நிறுவனத்திற்கு என சாதகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
- ஒரு சில நிறுவனத்திற்கு தங்கள் தொழிலை வளர்ப்பதற்கும் அல்லது கடனை திருப்பி கொடுக்கும் சூழல் ஏற்படலாம், அந்த சமயத்தில் புதிய பங்குகளை வெளியிடுவதன் மூலம், அந்த நிறுவனம் நிதியை திரட்டி கொள்ள முடியும்.
24/7 Meaning in Tamil |
Vlog Meaning in Tamil |
Vocabulary Meaning in Tamil |
Till Meaning in Tamil |
To Meaning in Tamil |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |