Itinerary என்றால் அர்த்தம் என்ன தெரியுமா ?

Advertisement

Itinerary Meaning in Tamil

நாம் அனைவரும் அன்றாடம் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொண்டாலே நமது அறிவுத்திறனை வளர்த்து கொண்டிருக்கிறோம் என்று நினைக்கிறோம்.ஆனால் அது தான் கிடையாது. அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொண்டால் நமது அறிவு  திறன் வளராது, அதனை தெரிந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் அதனை ஆராய வேண்டும். ஏன் இந்த சொல்லிற்கு இப்படி பெயர் வைத்திருக்கிறார்கள். இதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். அப்போது உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளை பற்றி தெரிந்திருக்க வேண்டும். உலகின் அனைத்து மொழிகளையும் உடனே கற்றுக்கொள்வது கஷ்டம். ஆனால் இப்பொழுது ஒரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அந்த மொழியில் உள்ள அனைத்து வார்த்தைகளுக்குமான அர்த்தத்தை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஆங்கில மொழியில் உள்ள வார்த்தைகளுக்கான சரியான அர்த்தங்களை நமது தாய்மொழியான தமிழில் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் உங்களுக்கு உதவும் நோக்கத்தில் Itinerary என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..

Itinerary Meaning in Tamil:

Itinerary என்பது நீங்கள் செல்லும் பயணத்திற்கான பாதை மற்றும் நீங்கள் செல்லும் இடங்கள் உட்பட ஒரு பயணத்திற்க்கு தேவையான திட்டமாகும்.

நீங்கள் மேற்கொள்ளப்போகும் பயணத்திற்கு தேவையான குறிப்புகள் அதாவது நீங்கள் செல்ல இருக்கும் பாதை, வழியில் நீங்கள் காணவேண்டிய இடங்கள், அதற்கான பயண நேரம், பயணத்தில் ஏற்படும் செலவுகள் போன்று உங்களின் பயணத்திற்கு தேவையான அனைத்தையும் திட்டமிடுவதை Itinerary எனப்படும்.

itinerary
Itinerary Meaning in Tamil with Example

Itinerary உங்கள் பயணம் ஒழுங்கான முறையில் எந்த வித சிக்கலும் இல்லாமல் அமைய உதவும்.

நாங்கள் எங்கள் பயணத் திட்டத்தை (itinerary) பல வாரங்களுக்கு முன்பே தயார் செய்தோம்

இதுபோன்ற மேலும் பல அர்த்தங்களை தெரிந்துகொள்ள எங்களது பொதுநலம்.காம் தளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சுற்றுலா ஆபரேட்டர் போக்குவரத்து ஏற்பாடு செய்து எங்களது பயன் திட்டத்தை தயார் செய்வார்.

சென்னையில் இருந்து பெங்களூரு செல்வதற்கு இடையில் எங்களது பயண திட்டத்தில் ஓசூர் செல்வதாக இருந்தது, ஆனால் போகமுடியவில்லை.

Portfolio என்பதன் அர்த்தம் தெரியுமா ?

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement