ஜல்லிக்கட்டு பெயர் காரணம் | Jallikattu Name Meaning In Tamil
பொங்கல் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஜல்லிக்கட்டு தான். ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும். ஜல்லிக்கட்டு காளைகளை களத்திற்கு அழைத்து செல்வதற்கு ஓர் இரு மாதங்களுக்கு முன்பிருந்தே தீவிரமாக பயிற்சி கொடுத்து வருவார்கள். ஜல்லிக்கட்டு வீரர்களும் தீவிரமாக பயிற்சி எடுத்து காளைகளை அடக்குவார்கள். இத்தகைய பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கான பெயர் காரணத்தை இந்த பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஜல்லிக்கட்டு விளையாட்டை காண்பதற்கும் ஏராளமான மக்கள் திரண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ஆவலாக காத்திருப்பார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டு பாரம்பரியான விளையாட்டு என்று நமக்கு தெரியும். இதற்கு ஜல்லிக்கட்டு என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்று நீங்கள் யோசித்தது உண்டா?
ஜல்லிக்கட்டு என்றால் என்ன?
ஏறு தழுவல், மஞ்சு விரட்டு, சல்லிக்கட்டு, அல்லது ஜல்லிக்கட்டு (Jallikattu) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. தமிழர்களின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தை மாதம் (January) பொங்கல் நாட்களில் வெகு சிறப்பாக நடைபெறும்.
காளைகள் மற்றும் வீரர்கள் போட்டிக்கான முன்பதிவு செய்து பயிற்சி எடுத்து சிறப்பாக ஆட்டத்திற்கு தயாராகுவார்கள். போட்டியில் காளைகளை அடக்கினால் வீரர்களுக்கு பரிசு கிடைக்கும். காளைகளை அடக்க முடியவில்லை என்றால் காளைகளின் உரிமையாளருக்கு பரிசு கிடைக்கும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்கள் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு, நார்த்தாமலை, ஆதமங்கலம், தேனிமலை போன்ற ஊர்களில் ஜல்லிக்கட்டு வெகு சிறப்பாக நடைபெறும்.
ஜல்லிக்கட்டு பெயர் காரணம்:
சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது.
ஜல்லிக்கட்டு வகைகள்:
- வேலி ஜல்லிக்கட்டு
- வாடிவாசல் ஜல்லிக்கட்டு
- வடம் ஜல்லிக்கட்டு
வேலி ஜல்லிக்கட்டு:
வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.
வாடிவாசல் ஜல்லிக்கட்டு:
மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.
வடம் ஜல்லிக்கட்டு:
வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு வேறு பெயர்கள்:
- ஜல்லிக்கட்டு
- சல்லிக்கட்டு
- மஞ்சு விரட்டு
- ஏறு தழுவுதல்
ஜல்லிக்கட்டு கவிதை | Jallikattu Quotes In Tamil
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |