Janmashtami Meaning in Tamil
பொதுவாக நம் முன்னோர்கள் காலத்தில் ஏதவாது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தால் புத்தகங்களை புரட்டினார்கள். ஆனால் இன்றைய காலத்தில் ஏதவாது தெரிந்து கோல் வேண்டும் என்று மொபைலில் தான் தேடுகின்றனர். அதனால் தான் நம் பதிவில் பல்வேறு வகையான சொற்களுக்கு அர்த்தங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஜென்மாஷ்டமி என்பதற்கான அர்த்தத்தை தெரிந்து கொள்வோம் வாங்க..
ஜென்மாஷ்டமி அர்த்தம்:
ஜென்மாஷ்டமி என்பது சமஸ்கிருதத்தில் இருந்து வந்த வார்த்தையாகும். இதனை ஜென்மா மற்றும் அஷ்டமி என்று இரு வார்த்தைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜென்மா என்பது பிறப்பு என்றும், அஷ்டமி என்பது எட்டு என்றும் பொருள்படும். அதனால் தான் ஜென்மாஷ்டமியை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் இருந்த பதினைந்து நாட்களில் -வது நாள் கிருஷ்ணரின் பிறந்த நாள் கொண்டப்படுகிறது.
கோகுலாஷ்டமியை இந்துக்கள் கொண்டாட கூடிய பண்டிகையாக இருக்கிறது. இந்துக்கள் ஜன்மாஷ்டமியை உண்ணாவிரதம், பாடுதல், ஒன்றாக பிரார்த்தனை செய்தல், சிறப்பு உணவு தயாரித்தல் மற்றும் பகிர்ந்துகொள்வது, இரவு விழிப்புக்கள் மற்றும் கிருஷ்ணா அல்லது விஷ்ணு கோவில்களுக்குச் சென்று கொண்டாடுகின்றனர்.
கிருஷ்ணனாக தேவகியின் கர்ப்பத்தில் எட்டாவது குழந்தையாக அவதரித்த நன்னாளையே கிருஷ்ண ஜெயந்தி என்று போற்றிக்கொண்டாடுகிறோம். கிருஷ்ணர் அவதரித்த திதி அஷ்டமி. நட்சத்திரம் ரோகிணி. எனவே திதியின் அடிப்படையில் கிருஷ்ணரின் பிறப்பை கோகுலாஷ்டமி என்றும் நட்சத்திர அடிப்படையில் ஶ்ரீஜயந்தி என்றும் கொண்டாடுகிறோம்
மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> | அர்த்தம் |