வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

King Maker (கிங் மேக்கர்) என்பதன் தமிழ் அர்த்தம்..! இந்தியாவின் கிங் மேக்கர் யார் .?

Updated On: July 15, 2024 3:12 PM
Follow Us:
King Maker Meaning in Tamil
---Advertisement---
Advertisement

King Maker Meaning in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கிங் மேக்கர் என்றால் என்ன.? இந்தியாவின் கிங் மேக்கர் யார்.? என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம்.  பொதுவாக, ஆங்கிலத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு தமிழ் அர்த்தம் என்பது இருக்கும். ஆனால், பெரும்பாலான ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தங்கள் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், அதனை தெரிந்து கொள்ளும் விதமாக நம் பொதுநலம் பதிவில் பல்வேறு ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் அர்த்தம் பற்றி பதிவிட்டு வருகிறோம்.

அந்த வகையில் இன்றைய பதிவில் King Maker என்பதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதை பின்வருமாறு விவரித்துள்ளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

King Maker என்றால் என்ன.?

 கிங் மேக்கர் (King Maker) என்றால், அலுவலகங்களுக்கு வேண்டிய ஒருவரை தேர்ந்தெடுத்து நியமிப்பவர் ஆவர். அதாவது, கிங் மேக்கர் என்பவர் ஒரு குறிப்பிடத்தக்க அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் கொண்ட ஒரு நபர் ஆவர். இன்னும் தெளிவாக சொல்லப்போனால் மன்னர்களைப் படைக்கும் ஆற்றலுடையவர்.  

கிங் மேக்கர், அவர்களின் இணைப்புகள் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட நபரை ஆட்சியாளராக ஆக்குவதற்கு ஆதரவளிக்கலாம்.

மேலும், ஏற்கனவே ஆட்சியில் இருக்கும் ஆட்சியாளரை அதிகாரத்தில் இருந்து அகற்றும் அதிகாரமும் உள்ளது.

கிங்மேக்கர் காமராஜர் பற்றிய வரலாறு

Who is The King Maker of India.?

இந்தியாவின் கிங் மேக்கர் கே.காமராஜ் ஐயா அவர்கள் ஆவர். இவர் தலைவர்களை உருவாக்குவதில் வல்லவர். இவர் இந்திய சுதந்திர ஆர்வலும் அரசியல்வாதியும் ஆவர். இவர் படிக்காதபோதிலும் நாட்டின் முதலமைச்சராக இருந்து மக்களுக்கு பயனுள்ள பல விசயங்களை செய்தார். இவர் படிக்கவில்லை என்றாலும் ஆங்கிலத்தில் மிக தெளிவாக பேசுவார்.

மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் ஐயா காமராஜர் அவர்கள். இதனால், மக்களால் படிக்காத மேதை, ஏழைப்பங்காளர் என்றெல்லாம் அன்போடு அழைக்கப்பட்டார். பள்ளிகளில் மதிய உணவு திட்டம் போன்று பல நல்ல விஷயங்களை செய்துள்ளார். இந்திய சுதந்திர போராட்டம் முதல் அரசியல் வரை அனைத்திலும் முக்கிய ஒருவராக திகழ்ந்தார். பெரும்பாலும், காமராஜர் ஐயா அவர்கள் தனது வாழ்க்கையை அரசியலில் செலவிட்டார். இவர் எளிமையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்த மனிதர்.

இவர் அரசியலில் இருந்தபோது பல பயனுள்ள விஷயங்களை செய்துள்ளார். 1975 ஆம் ஆண்டு அக்டோபர் 02 ஆம் தேதி மதிய உணவிற்கு பிறகு, நெஞ்சுவலி ஏற்பட்டது. காமராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவு சின்னங்கள் சென்னை, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி நிறுவப்பட்டது.

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now