LCU Meaning in Tamil
பொதுவாக அனைவருமே ஒவ்வொரு வகையான வார்த்தைகளை பேசும் போதும் சரி அல்லது திட்டும் போதும் சரி அதற்கு என்ன அர்த்தம் என்பது பாதி பேருக்கு தெரியாது. இது நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் நாம் ஏதாவது படம் பார்த்திருப்போம். அதில் அவர்கள் பேசும் ஆங்கில வார்த்தைக்கான அர்த்தம் தெரியும். சில வார்த்தைகளுக்கு தெரியாது. உடனே நாம் என்ன செய்வோம். அதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்று பக்கத்தில் இருக்கும் நபர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வோம்.
ஆனால் இப்போது யாரும் எனக்கு தெரியாது என்று சொல்லவே மாட்டார்கள். ஏன் தெரியுமா..? நம்முடைய கையில் தான் உலகமே உள்ளதே. அதாவது ஸ்மார்ட் போன் உள்ளது. ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி கேட்டால் உடனே சர்ச் செய்து தெரிந்து கொள்கிறோம். அதனை உங்களுக்கு இப்போது ஒரு வார்த்தைக்கான அர்த்தங்களை பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது Lcu என்ற வார்த்தைக்கான அர்த்தம் என்ன தெரியுமா..?
LCU Meaning in Tamil:
இந்த LCU என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளவதற்கு முன்பு இந்த LCU என்ற வார்த்தை எங்கியிருந்து உருவானது என்று தெரிந்து கொள்ளுங்கள். அதாவது தமிழ்த் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பவர் முதலில் ஒரு குறும்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.
அதன் பின்பு தமிழ் திரைப்படத்தில் மாநகரம் என்ற படம் எடுத்து அதில் வெற்றி காண்கிறார். அதன் பின்பு இவர் நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்று படம் இயக்குகிறார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்பு அவர் தமிழ் திரையுலகில் பெரிய மாஸ்டர், விக்ரம் என்ற படத்தை இயக்குகிறார். அவர் எடுத்த படம் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் பின்பு இந்த இயக்குனர் எடுக்கும் படத்திற்கு தான் ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள். அதேபோல் இவர் அடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர் தளபதி விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். ஆகவே அவர் இயக்கும் படங்களுக்கு LCU என்ற வார்த்தை உருவானது.
அதாவது LCU என்றால் Lokesh Cinematic Universe என்று உருவானது. தமிழில் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் ஆகும். Cinematic Universe என்பது சினிமா பிரபஞ்சம் என்று அர்த்தம் ஆகும்.Lokesh Kanagaraj Movies List Tamil:
- மாநகரம்
- கைதி
- மாஸ்டர்
- விக்ரம்
Bloody என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |