Makar Sankranti Meaning in Tamil
வணக்கம் வாசகர்களே.. இன்று நாம் மகர சங்கராந்தி என்றால் என்ன? அதனுடைய பொருள் என்ன என்பது குறித்த தகவலை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த மகர சங்கராந்தி இந்தியாவில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். இந்த விழா எதற்கு கொண்டப்படுகிறது? கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன என்பது குறைத்த தகவலை இப்பொழுது நாம் படித்தறியலாம்.
சரி வாங்க இப்பொழுது நாம் மகர சங்கராந்தி என்பதன் பொருள் என்ன தரும் அறியலாம்.
Makar Sankranti என்பதன் பொருள் என்ன தெரியுமா? – Makar Sankranti Meaning in Tamil
மகர சங்கராந்தி, அல்லது சங்கராந்தி சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாளாகும்.
இது துவக்கத்தில் குளிர்கால கதிர்த்திருப்பத்துடன் இயைந்திருக்கலாம். தற்போது இது ஜனவரி 14 அன்று நிகழ்கிறது. இன்றிலிருந்து பகல் நேரம் கூடுதலாவது கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பல பகுதிகளில் இது தானிய அறுவடையோடு ஒன்றுவதால் அறுவடை திருவிழாவாகவும் சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.
தொன்மையான இப்பண்டிகை, தமிழகத்தில் பொங்கல் பண்டிகை எனவும் இந்தியாவின் பிற பகுதிகளில் சூரிய வழிபாடு எனும் மகர சங்கராந்தி என்ற பெயரிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
புவி சூரியனைச் சுற்றி வந்தாலும் இந்திய தொன்மவியலில் பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது.
சமஸ்கிருதத்தில் சங்கரமண எனில் நகரத் துவங்கு எனப் பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று. இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு, வானிலை மற்றும் பன்முக பண்பாடு காரணமாக பல்வேறு பெயர்களிலும் பல்வேறு வரலாறுகளுடனும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அறம் செய்ய விரும்பு என்பதன் பொருள் என்ன?
மகர சங்கராந்தியின் சிறப்பு:
சூரியன் ராசி மண்டலத்தில் மகர ராசிக்கு பிரவேசிக்கும் நாளே மகர சங்கராந்தி ஆகும்.
சூரியன் 29 நாட்கள் 27 நிமிடங்கள் 16 நொடிகள் மகர ராசியில் பயணிப்பார். இது தை மாதத்தின் முதல் நாள் நிகழ்கிறது.
இது வெகு விமர்சையாக இந்தியா மட்டுமின்றி பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
தேவர்களுக்கு காலைப் பொழுதின் ஆரம்பம் மகர மாதம் ஆகும். ஆறு மாதம் பகல் மற்றும் ஆறு மாத இரவு என்பது தேவர்களின் ஒரு நாள் என்று நம்பப்படுகிறது.
காலை பொழுதின் துவக்கமே தை மாதம் ஆகும். எனவே தான் சூரியன் முதலான தேவர்களுக்கு இந்த ஆரம்ப நாளில் இந்துக்கள் பூஜைகள் செய்து வழிபடுகின்றனர்.
இந்தியா மட்டுமின்றி நேபாளம், தாய்லாந்து, மியான்மர், இலங்கை, லாவோஸ் போன்ற நாடுகளில் இந்த விழாவானது வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வசம்பை தூக்கி வாயில வைக்க என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரியுமா?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |