மல்லு என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..?

Advertisement

Mallu Meaning in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் நம் பதிவின் வாயிலாக ஒவ்வொரு ஆங்கில வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவின் வாயிலாக Mallu Meaning in Tamil அதாவது மல்லு என்றால் என்ன..? மல்லு என்பதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பொதுவாக நாம் படங்களில் ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தை பிரபலமானால் அதற்கு அர்த்தம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புவோம். அதேபோல படத்தில் வந்த வார்த்தை தான் இந்த மல்லு. நம்மில் பலரும் மல்லு என்ற வார்த்தைக்கான தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம். ஆகவே இந்த பதிவின் வாயிலாக மல்லு என்பதன் அர்த்தம் என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

Vintage என்பதற்கு இது தான் அர்த்தமா..

மல்லு என்பதன் அர்த்தம் என்ன..? 

கேரளா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சொல்லுங்கள். கேராவிற்கு செல்ல வேண்டும் என்பது நம்மில் பலரின் விருப்பமாக இருக்கிறது. உடனே நீங்கள் ஏன் இப்போது கேரளாவை பற்றி பேசுகிறோம் என்று யோசிப்பீர்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

பொதுவாக மல்லு என்பது கேரள மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு ஆங்கிலச் சொல் என்று சொல்லப்படுகிறது. அதாவது, மல்லு என்றால் மலையாளி என்று அர்த்தமாகும்.

மலையாளம் கேரளாவின் முதன்மை மொழியாக இருக்கிறது. அப்படி மலையாளம் பேசும் மக்களை மல்லு என்று அழைப்பார்களாம்.

மல்லு என்ற சொல்லை மலையாளிகளை ஏளனமாகப் பயன்படுத்தினாலும், அந்த வார்த்தை எல்லா மலையாளிகளுக்கும் எப்போதும் பெருமையாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

அதாவது, “மல்லு” என்ற சொல் இந்திய மாநிலமான கேரளாவில், அந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த சொல் “மலையாளி” என்ற வார்த்தையின் சுருக்கமான வடிவமாகும். இது கேரளாவின் மலபார் என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவரைக் குறிக்கிறது.

சிக்மா என்றால் என்ன தெரியுமா

மேலும் இது போன்ற அர்த்தம் பற்றிய தகவல்களை அறிந்துக் கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> அர்த்தம்
Advertisement